என் மகளே டெல்லி பாதுகாப்பில்லை என்று நினைக்கிறார்: முதல்வர் ஷீலா தீட்சித்

Subscribe to Oneindia Tamil

My daughter feels unsafe in Delhi: CM Sheila Dikshit
டெல்லி: டெல்லியில் வசிப்பது பாதுகாப்பில்லை என்று தனது மகள் கருதுவதாக அம்மாநில முதல்வர் ஷீலா தீட்சீத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு கூறுகையில்,

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இது நாடு முழுவதும் நடக்கிறது. இது ஒன்றும் போட்டி அன்று. நாங்கள் பள்ளி, கல்லூரிக்கு சென்றபோது விசில் அடிப்பார்கள். ஆனால் தற்போது போன்று நடந்ததில்லை. டெல்லியில் சட்டம் ஒழுங்கு அதிருப்தி அளிக்கிறது.

சட்டம் ஒழுங்கு என் கட்டுப்பாட்டில் இல்லாவிட்டாலும் அது பற்றி எனக்கு அக்கறை உள்ளது. பெண்களுக்கு பிரச்சனை ஏற்பட்டால் அவர்களுக்கு உதவ தொலைபேசி சேவை உள்ளது. டெல்லியில் இருப்பது பாதுகாப்பில்லை என்று என் மகளே கருதுகிறார் என்றார்.

டெல்லியில் கடந்த டிசம்பர் மாதம் 16ம் தேதி ஓடும் பேருந்தில் 23 வயது பிஸியோதெரபி மாணவி கற்பழித்து தாக்கப்பட்டதில் இறந்தார். இதன் பிறகு தான் பாலியல் வன்கொடுமைகள் பிரச்சனை பூதாகாரமாக வெடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+