ஸ்ரீநகர் விமான நிலையத்தில் யாசின் மாலிக் கைது- வீட்டுக் காவல்!
ஸ்ரீநகர்: பாகிஸ்தான் சென்றுவிட்டு நாடு திரும்பிய ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானுக்கு யாசின் மாலிக் சென்றிருந்த போது இந்தியாவில் பார்லிமென்ட் தாக்குதல் வழக்கு குற்றவாளி அப்சல் குரு தூக்கிலிடப்பட்டார். இதைக் கண்டித்து பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் யாசின் மாலிக் போராட்டம் நடத்தினார். அந்தப் போராட்டத்தில் மும்பை தாக்குதல் வழக்கின் மூளையாக குற்றம்சாட்டப்படுகிற லஷ்கர் இ தொய்பா தலைவர் ஹபீஸ் சயீத்தும் கலந்து கொண்டார். இது பெரும் சர்ச்சையாக வெடித்தது. யாசின் மாலிக்கின் பாஸ்போர்ட்டை முடக்கவும் வலியுறுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் யாசின் மாலிக் நேற்று டெல்லி வந்தடைந்தார். டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு சிவசேனா கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தினர். பின்னர் அவர் அங்கிருந்து ஸ்ரீநகர் சென்றடைந்தார். அங்கு விமான நிலையத்தில் யாசின் மாலிக் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவின் உடலை ஒப்படைக்கக் கோரி கடந்த ஒரு மாத காலமாக ஜம்மு காஷ்மீரில் போராட்டம் நடைபெற்று வருகிறது. பிரிவினை வாதம் கோரும் இயக்கத் தலைவர்கள் கிலானி உள்ளிட்டோர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications