1 ஏக்கர் ஜஸ்ட் ரூ700தான்.. ஆப்பிரிக்காவில் லட்சக்கணக்கான ஏக்கரை வளைத்த 80 இந்திய நிறுவனங்கள்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அனைத்து உலக நாடுகளும் குளோபல் வார்மிங் என்றெல்லாம் சொல்லிக் கொண்டு தத்துவம் பேசுகின்றன.. ஆனால் ஒன்றுக்கொன்று சளைத்தது இல்லை என்ற வகையில் ஆக்கிரமிப்புகளை நினைத்துப் பார்க்காத வகையிலெல்லாம் அரங்கேற்றி வருகின்றன..

ஆப்பிரிக்காவின் வரலாற்றில் இந்தியர்களுக்குப் பெரும் பங்கு இருக்கிறது. ஆங்கிலேயர் காலத்தில் தென்னாப்பிரிக்காவில் கூலியாட்களாக கொண்டு செல்லப்பட்டவர்கள் இந்தியத் தமிழர்கள். அதே ஆப்பிரிக்க தேசத்தில் வர்த்தகத்துக்குப் போய் வேர்பிடித்த வட இந்தியர்களும் உண்டு. ஆப்பிரிக்க நாடுகளின் காலனி ஆதிக்க சகாப்தம் முடிவுக்கு வந்த பின்னர் நடைபெற்ற பல பிரச்சனைகளுக்கு இந்தியர்களின் பெருத்த ஆக்கிரமிப்புதான் காரணமாக இருந்தது. இப்படி பெரிய நாடுகளின் ஆக்கிரமிப்புகள்தான் ஆப்பிரிக்கா கண்டத்தில் லூமூம்பாக்களையும் இடிஅமீன்களையும் நெல்சன் மண்டேலாக்களையும் பிரசவித்தது.

ஆப்பிரிக்காவில் அள்ள அள்ளக் குறையாத கனிம வளங்கள் ஏராளம்.. இவற்றை உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வருகிறோம்.. மறுசீரமைப்பு செய்கிறோம் என்ற நாட்டாமைத் தனங்களால் ஒவ்வொரு ஆதிபத்திய நாடுகளும் 'ஆட்டையை' போட்டு அபகரித்து வருகின்றன. இந்தக் கொடுமை ஒருபுறம் எனில் இன்னொரு புறம் அமெரிக்கா, சீனா, இந்தியா என அனைத்து நாடுகளுமே ஆப்பிரிக்காவில் "நில வேட்டையை'" நிகழ்த்தி சப்தமின்றி "அடிமை" முறையை உயிர்ப்பித்துக் கொண்டிருக்கின்றன..

1 ஏக்கர் ஜஸ்ட் ரூ700

1 ஏக்கர் ஜஸ்ட் ரூ700

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் ஒரு ஏக்கர் சுமார் ரூ42 ஆயிரம் வரை விலை போகிறது. ஆனால் ஆப்பிரிக்காவின் எத்தியோப்பியா, தான்சானியா, மொசாம்பிக் உள்ளிட்ட பல நாடுகளிலும் 1 ஏக்கர் நிலத்தோட விலை ஜஸ்ட் ரூ700தான்...அப்புறம் என்ன...

80 இந்திய நிறுவனங்கள்

80 இந்திய நிறுவனங்கள்

இவ்வளவு மலிவாக நிலம் மட்டுமல்ல..கூலிக்கு ஆட்களும் கிடைக்கிறார்கள்.. அப்புறம் என்ன.. நம்ம இந்திய நிறுவனங்கள் 80 கோதாவில் குதித்து 'நில வேட்டையை' நிகழ்த்தி வருகின்றன.

இந்தியாவுக்கு 3-வது இடம்

இந்தியாவுக்கு 3-வது இடம்

இந்த நில வேட்டையில் இப்போது இந்தியா அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்து 3-வது இடத்தில் இருக்கிறது. அதுசரி எப்படி எத்தனை ஏக்கர் நிலத்தை இந்திய நிறுவனங்கள் வளைத்துப் போட்டிருக்கின்றனவா?

7 லட்சம் ஏக்கர் வரை

7 லட்சம் ஏக்கர் வரை

இந்திய நிறுவனங்கள் சில 3 லட்சம் ஏக்கர், 5 லட்சம் ஏக்கர் அளவுக்கு நிலத்தை விலைக்கு வாங்கி.. பாம் ஆயில் போன்றவற்றை சாகுபடி செய்து அமோகமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றன..மண்ணின் மக்களின் ரத்தத்தில்..

சர்ச்சையில்..

சர்ச்சையில்..

இப்படி நிலவேட்டையாடி அபகரித்த நிலங்களில் நடைபெறுகிற தொழிற்சாலைகள், வேளாண் பண்ணைகளில் நடந்தேறும் மனித உரிமை மீறல்களை பல்வேறு அமைப்புகள் மிகக் கடுமையாக கண்டித்தும் இருக்கின்றன. இதனால் இந்த ஆக்கிரமிப்பு நிறுவனங்களுக்கு எதிரான போராட்ட்டங்களை உள்ளூர் மக்கள் நடத்தவும் செய்கின்றனர்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+