பாஜகவில் அத்வானியின் முக்கியத்துவம் குறைப்பு: முக்கிய குழுவிலிருந்து நீக்க திட்டம்?

பாஜகவில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அடுத்த நிலையில் இருந்தவர் அத்வானி. கடந்த இரு மக்களவைத் தேர்தல்களை அவரை பிரதமராக முன் நிறுத்தித் தான் பாஜக போட்டியிட்டது. ஆனால், பெரும் தோல்வி அடைந்தது.
இந் நிலையில், இப்போது கட்சியில் அத்வானியின் முக்கியத்துவம் குறைந்து வருகிறது. அந்த இடத்தை குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பிடித்துவிட்டார். வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படும் அளவுக்கு அவருக்கு ஆதரவு பெருகி வருகிறது.
கட்சியின் கொள்கை வழிகாட்டியாக உள்ள ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் ஆதரவும் நரேந்திர மோடிக்குத்தான் உள்ளது.
இந்த நிலையில், பாஜகவின் முக்கிய கொள்கை முடிவுகளை எடுக்கும் உயர் அதிகார குழுவில் அத்வானிக்கு இடம் அளிக்க வேண்டாம் என்ற முடிவுக்கு ஆர்.எஸ்.எஸ். இயக்கம் வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தெரிவிக்கின்றன.
இனி நரேந்திர மோடி, கட்சியின் தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங், முன்னாள் தலைவர் நிதின் கட்காரி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சித் தலைவர்களாக உள்ள சுஷ்மா சுவராஜ் மற்றும் அருண் ஜேட்லி ஆகியோர் மட்டுமே உயர் அதிகார குழுவில் இடம் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.
இந்த ஏற்பாடு குறித்து ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத், நரேந்திர மோடியுடன் சமீபத்தில் விவாதித்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
இந் நிலையில் கட்சியில் அத்வானி ஓரங்கட்டப்பட்டு வருவதையே அவருடைய சமீபத்திய நடவடிக்கைகளும் காட்டுகின்றன. ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்துவதில் பாஜக தோல்வி அடைந்து விட்டதாகவும், கட்சி வளரவே இல்லை என்றும் அத்வானி சமீபத்தில் அதிருப்தி தெரிவித்திருந்தார்.
காங்கிரசைப் போல், பாஜகவையும் மக்கள் அதிருப்தியுடன் பார்க்கத் தொடங்கி விட்டனர் என்று அவர் கருத்து தெரிவித்திருந்தார்.
அத்வானியின் விரக்தி நிலையை இந்த கருத்துகள் பிரதிபலிப்பதாக, அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
ஆனால், இதை பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் மறுத்துள்ளார். கொல்கத்தாவில் நிருபர்ரளிடம் பேசிய அவர், கட்சியில் அத்வானிக்கு முக்கியத்துவம் குறைக்கப்படுவதாக வெளியான தகவல் கற்பனையானது, தவறானது. அவர் எங்களது மூத்த தலைவர் என்றார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications