மனம் ஒத்து செக்ஸ்: வயது வரம்பு 18லிருந்து 16 ஆக குறைகிறது.. வருகிறது சட்டம்

மேலும் கற்பழிப்பை ஒரு பெரும் குற்றச் செயலாகவும் இந்த சட்டம் அங்கீகரிக்கவுள்ளது.
குற்றவியல் திருத்தச் சட்டம் 2013ல் 2 முக்கிய அம்சங்கள்தொடர்பாக அமைச்சர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இந்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
அதில் ஒன்று மனம் ஒத்து செக்ஸ் வைத்துக் கொள்வதற்கான வயது நிர்ணயம். 2வது கற்பழிப்பு சம்பவத்தில் ஆண், பெண் இருவரையும் சம நிலையில் வைத்துப் பார்ப்பது தொடர்பானது.
அதில், தற்போது மனம் ஒத்து செக்ஸ் வைத்துக் கொள்வதற்கான வயதை 16 ஆக குறைப்பதற்கு அமைச்சர்களிடையே கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளதாம். அதேபோல கற்பழிப்பு சம்பவத்தில் ஆணுக்கே அதிக பங்கு இருக்கும் வகையில் சட்ட மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதாவது ஆண்தான் இதில் குற்றவாளி, பெண் பாதிக்கப்பட்டவராக மட்டுமே கருதப்படுவார்.
கருத்தொற்றுமை ஏற்பட்டதைத் தொடர்ந்து இன்றே இந்த சட்ட மசோதா அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் தரப்படும் என்று தெரிகிறது.
தற்போதைய சட்டப்படி 18 வயதுக்குக் கீழ் உள்ளோர் மைனராக கருதப்படுகிறார். சமீபத்தில் டெல்லியில் ஓடும் பேருந்தில் பிசியோதெரப்பி மாணவி பாலியல் பலாத்காரம்செய்யப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளில் ஒருவன் மைனர் என்பதும், அவனுக்கு 18 வயதுக்குக் கீழ் ஆகிறது என்பதும் அனைவரையும் அதிர வைத்தது. மேலும் மைனர் என்ற ஒரே காரணத்திற்காக கொடும் குற்றம் புரிந்த அவனுக்கு பெரும் தண்டனை கிடைக்க வாய்ப்பில்லை என்பதும் அனைவரையும் அதிரவைத்தது.
இதையடுத்து மைனருக்கான வயதைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இதையடுத்து நீதிபதி ஜே.எஸ்.வர்மா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி கற்பழிப்பு தொடர்பான சட்டத்தில் கொண்டு வரப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்து அரசுக்குப் பரிந்துரைத்தது. அதன் அடிப்படையிலேயே திருத்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளது.
வர்மா கமிஷன் மைனருக்கான வயதை 16 ஆக குறைக்க பரிந்துரைத்திருந்தது. இதற்கு மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள்நலத்துறை ஆதரவு தெரிவித்திருந்தது. அதேசமயம், வேறு சில துறைகளின் அமைச்சர்கள் இதற்கு ஆட்சேபனை தெரிவித்திருந்தனர். இது சிறார் பாலியல் குற்றங்களுக்கு வழி வகுக்கும் என்று அவர்கள் அச்சம் தெரிவித்திருந்தனர்.
இதனால் குழப்பம் ஏற்பட்டது. தற்போது இதில்கருத்தொற்றுமை ஏற்பட்டு வயதை 16 ஆக குறைக்க உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்தசட்ட திருத்தத்தில் உள்ள பிற முக்கிய அம்சங்கள்
கற்பழிப்பு குற்றங்களுக்கு இனி ஆயுள் தண்டனை வழங்கப்படும். பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவச மருத்து உதவிகள் அளிக்கப்படுவது கட்டாயமாக்கப்படும்.
இந்க மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தபின்னர் நாடாளுமன்றத்தில் இந்த வாரத்திலேயே அது தாக்கல்செய்யப்பட்டு மார்ச் 22ம் தேதிக்குள் நிறைவேற்றப்படும் என்றுதெரிகிறது. அன்றுதான் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படவுள்ளது
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications