இலங்கையை எதிர்த்தால் காஷ்மீர் விவாகரம் எழுமாம்: சு.சாமி சொல்கிறார்!

இது தொடர்பாக அவர் கூறுகையில், இலங்கை அதிபருக்கு நெருக்கமான அதிகாரிகள், அமெரிக்க வெளியுறவுத்துறையின் மூத்த அதிகாரிகள் மற்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் ஆகியோர் விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். எனவே இந்த விவகாரத்தில் இன்னமும் சமரசத்துக்கு வாய்ப்பு உள்ளது. அமெரிக்கா இப்போது சுற்றில் விட்டுள்ள தீர்மானத்தில் கோரப்பட்டுள்ளது போல், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை என்று சமரசத் தீர்மானம் வலியுறுத்தாது.
இந்தியாவுக்கு சிக்கல்
மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கை அரசே உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டும் என்று அமெரிக்காவின் தீர்மானம் இறுதியாக்கப்படும் என்று நான் எதிர்பார்க்கிறேன். இது போன்ற கோரிக்கையால் இந்தியாவும் மகிழ்ச்சியடையாது என்பதையும் கூறினேன். ஏனெனில், இதை இந்தியா ஏற்றுக் கொண்டால் காஷ்மீரில் நடந்த மனித உரிமை மீறல் குறித்து சர்வதேச விசாரணை தேவை என்ற கோரிக்கை எழுவதற்கு வாய்ப்புண்டு.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில்
ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் நிறைவேற்றப்படும் எந்தவொரு தீர்மானத்துக்கும் ஐநா பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல் அளித்தால்தான் மதிப்பும், பலமும் கிடைக்கும். இப்போது அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானத்தைப் பொறுத்த வரை, அதற்கு ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் ஒப்புதல் கிடைக்க வாய்ப்பில்லை. ஏனெனில் ரஷியாவோ, சீனாவோ தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி இத்தீர்மானத்தை நிராகரித்து விடும். இந்த யதார்த்த நிலைமையை பிளேக்கும் மற்ற அதிகாரிகளும் புரிந்து கொண்டனர்.
அமெரிக்காவின் நழுவல்
அமெரிக்காவும் போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை என்று நேரடியாகக் கோராமல், ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவி பிள்ளையின் பரிந்துரையைக் குறிப்பிட்டுள்ளது.அந்தப் பரிந்துரையில் சுதந்திரமான, சர்வதேச விசாரணை தேவை என்று கூறப்பட்டுள்ளதை அமெரிக்கா மேற்கோள் காட்டியுள்ளது. இத்தீர்மானத்தால் விடுதலைப்புலிகள் அமைப்புக்குப் புத்துயிர் கிடைப்பதற்கோ, இலங்கையில் பிரிவினைவாதம் மற்றும் தமிழ்த் தீவிரவாதம் மீண்டும் உருவாகவோ வாய்ப்பு ஏற்படக் கூடாது என்பதை நான், அமெரிக்க அதிகாரிகளிடம் கூறினேன்.
புலிகளை அழித்த அமெரிக்கா
விடுதலைப்புலிகளின் தோல்விக்கு அமெரிக்கா பங்களித்தது என்பதையும் அவர்களுக்கு நினைவூட்டினேன். புலிகளின் கப்பல்களை அமெரிக்க ஆயுதங்கள் மூலமே இலங்கையால் அழிக்க முடிந்தது. இத்தீர்மான விஷயத்தில் ராஜபக்சே அரசும் தனது நிலைப்பாட்டை மென்மையாக்கிக் கொள்ளும் என்று எதிர்பார்க்கிறேன். ஏனெனில் இலங்கையின் ஏற்றுமதிச் சந்தைகளில் ஒன்றாக அமெரிக்கா இருக்கிறது என்றார் சுப்பிரமணிய சாமி.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications