கொலைகார மாலுமிகளை திருப்பி அனுப்பாத இத்தாலி- பிரதமர் மன்மோகன்சிங் கண்டனம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தமிழக மீனவர்களை படுகொலை செய்த கொலைகார மாலுமிகளை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப முடியாது என்று இத்தாலி அறிவித்திருப்பதற்கு பிரதமர் மன்மோகன்சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அரபிக் கடற்பரப்பில் தமிழக வீரர்களை படுகொலை செய்த இத்தாலிய மாலுமிகள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்காக நாட்டு சென்று வர அனுமதிக்கப்பட்டனர். இதனடிப்படையில் அந்நாட்டு தேர்தலில் வாக்களிக்க இருவரையும் உச்சநீதிமன்றம் அனுப்பி வைத்தது. ஆனால் தற்போது இரு இத்தாலிய மாலுமிகளை மீண்டும் இந்தியாவுக்கு அனுப்ப முடியாது என்று இத்தாலி கூறியுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மன்மோகன்சிங், இத்தாலியின் நிலைப்பாடு ஏற்றுக் கொள்ள முடியாதது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சருடன் ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications