பாஜக பொதுக்குழுவில் தமிழக போலீசாருக்கு கண்டனம்
கரூர்: கரூரில் நடைபெற்ற பாஜக பொதுக்குழு கூட்டத்தில் தமிழக போலீசார் மீது அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் பாஜக மாவட்டத் தலைவராக இருப்பவர் சிவசாமி. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காவிரி ஆற்றில் மணல் அள்ளுவதால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து போகின்றது, விவசாயம் பாதிக்கின்றது என்றார். இருப்பினும் விதிமுறைகளை மீறி மணல் அள்ளப்படுகின்றது. எனவே, காவிரி அற்றில் மணல் அள்ள தடைவிதிக்கக் கோரி மதுரை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கரூர் மாவட்டத்தில் செயல்பட்ட 7 மணல் குவாரிகளை மூட உத்தரவிட்டது. இதனால் ஆளும் கட்சியைச் சேர்ந்த சிலரும், மணல் வியாபாரிகள் சிலரும் கடும் கோபம் அடைந்து சிவசாமி மீது ஆற்றில் பெண்கள் குளிக்கும் போது வீடியோ எடுத்ததாகக் கூறி போலீசில் புகார் கொடுத்தனர். அவர்களின் புகாரின்பேரில் வாங்கல் காவல் நிலையத்தில் சிவசாமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் கரூரில் நடந்த பாஜக பொதுக்குழு கூட்டத்தில் சிவசாமி மீது போடப்பட்டுள்ளது திட்டமிட்ட பொய் வழக்கு இந்த வழக்கை உடனே வாபஸ் பெற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன் மூலம் தமிழக போலீஸ் மீது பாஜக குற்றம் சாட்டியுள்ளது. ஆனால், பாஜக புகாருக்கு கரூர் மாவட்ட போலீஸ் தலைமை இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications