தமிழீழம் அமைக்க கோரி தமிழகம், புதுவையில் 92 மாணவர்கள் சாகும் வரை உண்ணாவிரதம்!

தமிழீழம் கோரியும் இலங்கைக்கு எதிராக நடவடிக்கை கோரியும் சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேர் பற்ற வைத்த போராட்டத் தீ தமிழகமெங்கும் கொழுந்துவிட்டு எரிகிறது. லயோலா கல்லூரி மாணவர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தாலும் தமிழகம் மற்றும் புதுவையில் சுமார் 92 மாணவர்கள் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
92 பேர் சாகும்வரை உண்ணாவிரதம்
சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் 8 பேர்
திருநெல்வேலி சட்டக் கல்லூரி மாணவர்கள் 13 பேர்,
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் உளவியல், தொடர்பியல், பொருளாதாரம், வரலாறு ஆகிய துறைகளைச் சேர்ந்த மாணவர்கள் நிர்மல்ராஜன், ராமன், முகமதுகான், சிவா, வள்ளிகண்ணு, பிரசாத், பிரபாகரன், செந்தமிழ்ராஜ், என்ற மதன்ராஜ், நவீன், முத்துக்குமார், மாரியப்பன் ஆகிய 12 பேர்
பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரி மாணவர்கள் 11 பேர்
கோவை சட்டக்கல்லூரி மாணவர்கள் 15 பேர்
கோவை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் 4 பேர்
புதுச்சேரி சட்டக்கல்லூரி மாணவர்கள் 15 பேர்
கடலூரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாணவர் பாசறையின் 14 மாணவர்கள் என மொத்தம் 92 பேர் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இவர்களில் பலர் 2-வது நாளாக சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருக்கின்றனர்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக கலை, அறிவியல் மற்றும் பொறியியல் மாணவர்கள் இரண்டாவது நாளாக பல்கலைக்கழக வளாகத்தில் பூமா கோயில் முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்க பெரும் எண்ணிக்கையில் காவல்துறை - அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மின்சாரம் துண்டிக்கப்பட்டு 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் முழக்கங்கள் எழுப்பியவாறு தொடர்ந்து அமர்ந்துள்ளனர். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக பொறியியல் மாணவர்கள் அண்ணாமலைநகர் ராஜேந்திரன்சிலை அருகே இலங்கை அதிபர் ராஜபக்சே உருவபொம்மையை எரித்து போராட்டம் நடத்தினர்.
கோவை பாரதியார் பல்கலைகழக மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.
புதுக்கோட்டை மன்னர் அரசு கல்லூரியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் உண்ணாவிரதம் இருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications