இலங்கை விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறதாம்: இது நம்ம ஞானதேசிகன் 'புருடா'!
சென்னை: இலங்கை விவகாரம் குறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதால் மாணவர்கள் யாரும் போராட வேண்டாம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இலங்கைத் தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. தமிழக காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இது சம்பந்தமாக தொடர்ந்து பிரதமரிடமும், வெளியுறவுத்துறை அமைச்சரிடமும் பேசியிருக்கிறோம்.
இந்த சூழ்நிலையில் உண்ணாவிரதம் இருந்த மாணவர்களை முன்னாள் காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவும், சில கட்சி நண்பர்களும் பார்க்கச் சென்ற போது அருகில் இருந்த சிலர் கற்களை எறிந்தும், தண்ணீர் பாட்டில்களை வீசியும் உள்ளார்கள். அதனால் தாமோதரன் காயம் பட்டிருக்கிறார். காவல்துறை இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன்.
இலங்கை பிரச்சனையில் காங்கிரஸ் கட்சியும், மத்திய அரசும், தமிழர்களின் நலன்காக்க உறுதி பூண்டிருக்கிறது. ஆகவே தமிழகத்தில் உள்ள மாணவர்கள் உண்ணாவிரதம் மற்றும் போராட்டங்களில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அவர் விடுத்த மற்றொரு அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
தூத்துக்குடி தருவைக்குளம் பகுதியில் 16 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் பிடிக்கப்பட்டு நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று அவர்களை காவலில் வைத்திருந்தனர். இலங்கை அரசோடு பேசி அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென்று வெளியுறவு விவகாரத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் மற்றும் பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோரிடம் நேரிடையாக முறையிட்டேன். 16 மீனவர்களும் விடுவிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
போதைப் பொருள் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு ஜெயிலில் இருக்கும் மற்ற ஐந்து பேரையும் விடுவிக்கின்ற முயற்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மத்திய அரசின் துணையோடு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications