ஆட்டுக் கறியுடன் மாட்டுக் கறியை கலந்துவிடும் இங்கிலாந்து ‘இந்திய’ உணவகங்கள்
லண்டன்: உணவுப் பொருட்களில் கலப்படம் என்பது வியாபரிகளின் வியாதிதான்.. இந்த வியாதிக்கு விதிவிலக்கான தேசமே இல்லை போல்... அண்மையில் ஐரோப்பிய நாடுகளில் பர்கரில் குதிரைக் கறியை கலந்து விற்பனை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இங்கிலாந்து வாழ் இந்துக்கள் அமைப்பினர் இன்னொரு குண்டை தூக்கி வீசியுள்ளனர். இந்துக்களில் வெஜிடேரியனும் உண்டு...நான் வெஜிடேரியனும் உண்டு.. வெஜிடேரியன்களுக்கு இதுவரை தாங்கள் சாப்பிடும் உணவில் எந்தக் குழப்பமும் வந்தது இல்லை. நான் வெஜிடேரியன் சாப்பிட விரும்பும் இந்துக்களுத்தான் ரொம்பவே அச்சமாம்.. அப்படி என்ன?
இங்கிலாந்து நாட்டில் உணவகங்களில் பரிமாறப்படும் ஆட்டுக் கறி மீது இப்போது அவர்களுக்கு டவுட்டு வந்துவிட்டது. சில உணவகங்களில் ஆட்டுக் கறி ரொம்ப காஸ்ட்லியாக இருப்பதால் லைட்டாக மாட்டுக் கறியை மிக்ஸ் செய்துவிடுகிறார்களாம்.. பொதுவாக இது டக்கென கண்டுபிடிக்கப்படுவதில்லை.. ஆனால் ஆட்டுக் கறி பிரியர்கள் சும்மா விடுவார்களா? புகார் தட்டிவிட்டுவிட்டனர்.

சோதனை
அப்புறம் என்ன? இங்கிலாந்தில் இயங்கும் 126 இந்திய நிறுவனங்கள் சந்தேகப் பட்டியலுக்குக் கொண்டுவரப்பட்டன. அந்நாட்டு உணவு தரக் கட்டுப்பாட்டுப் பிரிவினர் ரெய்டுக்கும் போய் ஆய்வு நடத்தியிருக்கின்றனர்.

ஆட்டுக் கறியுடன் மிக்ஸிங்
இந்த 126 நிறுவனங்களில் 46 உணவகங்களில் பிராடுத்தனம் செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஆட்டுக்கறி என்று இந்த உணவகங்கள் பரிமாறியதில் கலப்படம் செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதிலும் ஒரு கூத்து..

46ல் 13 நிறுவனங்கள்
வசமாக சிக்கிய 46 நிறுவனங்களில் 33 செய்த பிராடுத்தனம் கண்டு இங்கிலாந்து அதிகாரிகள் அப்படியே ஆடிப் போய்விட்டனராம். இவை அனைத்திலுமே ஆட்டுக் கறி என்று விற்பனை செய்யப்பட்டது 'பியூர்' பீப் (மாட்டுக் கறிதானாம்!) மிச்ச 13நிறுவனங்கள்தான் ஜஸ்ட் மிக்ஸிங்...ஆட்டுக்கறியோடு நைசாக மாட்டுக் கறி கலந்தனவாம்! வேறு என்ன செய்யப் போகிறார்கள்.. இழுத்து மூட முடிவு செய்திருக்கின்றனராம்! இன்னும் இந்த உண்மையை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கலையாம்.. இதனால் பிராடு ஹோட்டல்களை பற்றி சொல்லுங்க என்கின்றனர் இங்கிலாந்து வாழ் இந்துக்கள்!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications