ஒரு அறை விடட்டுமா...: நிருபரை மிரட்டிய ஜெயபிரதா எம்.பி.
Subscribe to Oneindia Tamil

உத்தர பிரதேச மாநிலத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட டிஎஸ்பி ஜியா உல் ஹக்கின் மனைவியை ராம்பூர் தொகுதி எம்.பி. ஜெயபிரதா நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். அதன் பிறகு செய்தியாளர்கள் அவரிடம் கேள்விகள் கேட்டனர்.
அப்போது ஒரு நிருபர், நீங்கள் அங்கம் வகித்திருந்த சமாஜ்வாடி கட்சியுடனான உங்கள் உறவு குறித்து என்று கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜெயபிரதா, என்ன கேள்வி இது, ஒரு அறை விடுட்டுமா என்று மிரட்டியுள்ளார்.
சமாஜ்வாடி கட்சி தான் என்னை வெளியேற்றியது என்று அவர் தெரிவித்தார். ஜெயபிரதா ஒரு நிருபரை அறைவேன் என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications