தமிழகம் முழுவதும் சட்டக்கல்லூரி மாணவர்கள் 3வது நாளாக உண்ணாவிரதம்: கலைக்கல்லூரி மாணவர்கள் ஆதரவு
சென்னை: ஈழத்தமிழர் விவகாரம் தொடர்பான சட்டக் கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டம் இன்று 3வது நாளாக நடந்து வருகிறது.
ஐ.நா. சபையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும், அதிபர் ராஜபக்சே மீது போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
சென்னை அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக மாணவர்கள் 8 பேர் கடந்த 11ம் தேதி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை துவங்கினர். அவர்களின் போராட்டம் இன்று 3வது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது. மாணவர்கள் சோர்வாக காணப்படுகின்றனர். அவர்கள் குறைந்த அளவே தண்ணீர் குடிப்பதால் உடலில் நீர்ச்சத்து குறைந்து வருகிறது என்று அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அவர்களுடன் சேர்ந்து யுவராஜ், பீம்ராஜ் ஆகிய மாணவர்கள் நேற்று முதல் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இது தவிர கோவை சட்டக்கல்லூரி மாணவர்களும், கலைக் கல்லூரி மாணவர்களும் மதிமுக அலுவலகத்தில் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். அவர்களின் உண்ணாவிரதம் இன்று 3வது நாளாக தொடர்கிறது. சட்டக்கல்லூரி மாணவர் அலாவுதீன், ராஜாகுரு, பாண்டியன் மற்றும் கலைக்கல்லூரி மாணவர் சீனிவாசன் தலைமையில் 23 பேர் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
மேலும் திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் இன்று 2வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். திருச்சி உருமு கல்லூரி மாணவர்களும் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
புதுக்கோட்டையில் அரசு மன்னர் கல்லூரி மாணவர்கள் சண்முகநாதன், முருகேசன், கார்த்திக், சக்திவேல், சுரேஷ், ராகுல்சன், சசிசேகர் ஆகியோர் சாகும்வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நெல்லை சட்டக்கல்லூரி மாணவர்கள் 13 பேர் இன்று தொடர்ந்து 3வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இதே போன்று புதுவை சட்டக்கல்லூரி மாணவர்கள் 15 பேரின் உண்ணாவிரதப் போராட்டம் இன்று 3வது நாளை அடைந்துள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications