கடலூரில் வெற்றிகரமாக டெசோ வேலை நிறுத்தம்! நீதிமன்றம் புறக்கணிப்பு!!மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!!
கடலூர்: இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வலியுறுத்தி டெசோ அழைப்பு விடுத்திருந்த முழு அடைப்பு போராட்டம் கடலூரில் 90% வெற்றி பெற்றது.
கடலூரில் வணிக நிறுவனர்கள், மோட்டார் வாகன ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் அனைவரும் முன் வந்து பொதுவேலைநிறுத்தத்திற்கு ஆதரவு தந்தனர். அதைத்தொடர்ந்து கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். தேவனாம்பட்டினம் அரசு பெரியார் கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டத்தில் தாலுகா வாரியாக டெசோ அமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது. கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரையில் 90% கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
தூத்துக்குடி
தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் பகுதியில் முழுமையாகவும், தூத்துக்குடி நகரில் ஒரு சில இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. தூத்துக்குடி பழைய, புதிய பேருந்து நிலைய கடைகள் முற்றிலும் அடைக்கப்பட்டிருந்தன. திமுக மாவட்ட செயலாளர் பெரியசாமி தலைமையில் பழைய பேருந்து நிலையத்தின் முன்பாக நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர் மறியலில் ஈடுபட்டு கைதாகினர்
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications