61 ஜோடியுடன் உட்கார்ந்து எனக்கும் திருமணம் செய்து கொள்ள ஆசை: மு.க.ஸ்டாலின் பேச்சு

இந்நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்க்கா ஸ்டாலினுடன் கலந்து கொண்டார். முன்னாள் எம்.எல்.ஏ. பி.கே. சேகர்பாபு வரவேற்று பேசினார். முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.
61 ஜோடிகளுக்கும் மு.க.ஸ்டாலின் தங்கத் தாலியை எடுத்துக் கொடுத்தார். மணமகன் ஒவ்வொருவராக வந்து தாலியை பெற்றுக் கொண்டனர். பின்னர் கெட்டிமேளம் முழங்க மணமகன்கள் மணமகள்கள் கழுத்தில் தாலி கட்டினார்கள்.
மணமக்களை மு.க.ஸ்டாலின், துர்க்கா ஸ்டாலின் வாழ்த்தினார்கள். விழாவில் மணமக்களை வாழ்த்தி மு.க.ஸ்டாலின் பேசியபோது, ''இங்கு சீர்திருத்த
முறையில் நடைபெறும் இந்த சுயமரியாதை திருமணங்களை எண்ணி பெருமைப்படுகிறேன். மணமக்கள் எல்லா செல்வங்களும் பெற்று வாழ வேண்டும். 16-ம் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டும். 16 என்றால் 16 பிள்ளைகள் என்று எண்ணி விடாதீர்கள். முத்தமிழ் அறிஞர் கி.ஆ.பெ.விசுவநாதம் 16 செல்வங்களை குறிப்பிட்டுள்ளார்.
இங்கு 61 ஜோடியுடன் நான் 62-வது ஜோடியாக உட்கார்ந்து திருமணம் செய்து கொள்ள ஆசை. ஆனால் மார்ச் 1-ந்தேதியே என் தந்தை எனது திருமணத்தை நடத்தி வைத்தார். என் தந்தை முன்னிலையில் மனைவிக்கு தாலி கட்டினேன்.
இன்று நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. என் வாழ்நாளில் ஏற்பட்ட பெரிய மகிழ்ச்சியாக இதை கருதுகிறேன். இது மறக்க முடியாத ஒன்று.
இந்த நிகழ்ச்சிக்கு பி.கே. சேகர்பாபு யாரும் செய்ய முடியாத வகையில் மிக சிறப்பான ஏற்பாடுகள் செய்துள்ளார். அவரை நான் மனதார பாராட்டி வாழ்த்துகிறேன். மணமக்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்'' என்று தெரிவித்தார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications