Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழீழத்துக்காக தமிழகம், புதுவையில் 5- வது நாளாக தொடரும் மாணவர் போராட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழீழத் தனியரசுக்கான பொதுவாக்கெடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் களத்தில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை லயோலா கல்லூரியின் 8 மாணவர்கள் 5 நாட்களுக்கு முன்பு பற்ற வைத்த சாகும் வரையிலான உண்ணாவிரதம் தமிழகத்தில் கட்டுக்கடங்காத எழுச்சியை உருவாக்கியிருக்கிறது. லயோலா கல்லூரி மாணவர்கள் தங்களது போராட்டத்தை முடித்துக் கொண்ட போதும் மாநிலம் முழுவதும் அனைத்து கல்லூரி மாணவர்களும் போராட்ட களத்தில் குதித்து உள்ளனர். தமிழகத்தில் போராட்ட களத்துக்கு வராத கல்லூரிகளே இல்லை என்ற ஒரு நிலை உருவாகியிருக்கிறது.

சென்னையில் 30 சட்ட மாணவர்கள்

சென்னையில் 30 சட்ட மாணவர்கள்

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள சட்டக் கல்லூரி விடுதியில் 30 மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் பழனிக்குமார் என்ற மாணவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் கீழ்ப்பாக்கம்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவருக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்

புதுக்கோட்டையில்

புதுக்கோட்டையில்

புதுக்கோட்டையில் அரசு மன்னர் கல்லூரி மாணவர்கள் 12ந் தேதி முதல் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக பொன்னமராவதியில் கணேசர் கலை அறிவியல் கல்லூரி மாணவ-மாணவியர் 200 பேர் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

புதுக்கல்லூரியில் 22 பேர்

புதுக்கல்லூரியில் 22 பேர்

சென்னை புதுக்கல்லூரியில் 3வது நாளாக 22 மாணவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகின்றனர். சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் 5-வது நாளாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துகின்றனர். இதில் மாணவிகளும் பங்கேற்றுள்ளனர்.

காஞ்சிபுரத்தில் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மாணவர்கள் 200க்கும் மேற்படோர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

தஞ்சையில் 11 பேர் போராட்டத்தை முடித்தனர்

தஞ்சையில் 11 பேர் போராட்டத்தை முடித்தனர்

தஞ்சையில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய தமிழ்ப் பல்கலைக் கழக மாணவர்கள் 11 பேர் போராட்டத்தை முடித்துக் கொண்டனர்.

கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் 50 பேர் 13ந் தேதி முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் முத்துக்குமார் என்ற மாணவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

22 பேர் 2வது நாளாக உண்ணாவிரதம்

22 பேர் 2வது நாளாக உண்ணாவிரதம்

திருச்சியில் சட்டக்கல்லூரி மாணவர்கள் 22 பேர் 4-வது நாளாக உண்ணாவிரதத்தைத் தொடர்கின்றனர்.

ஈவெரா கலைக் கல்லூரி மாணவர்கள், தூவாக்குடி கலைக் கல்லூரி மாணவர்கள், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நெல்லையில் 5 பேரின் நிலை மோசம்

நெல்லையில் 5 பேரின் நிலை மோசம்

நெல்லை அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் 13 பேர் 5வது நாளாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் 5 பேரின் நிலை மிகவும் மோசமடைந்துள்ளது.

புதுச்சேரி சட்டக் கல்லூரி மாணவர்களில் 12 பேர் கடற்கரைச் சாலையிலும் 9 பேர் புதிய பேருந்து நிலையம் முன்பும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் 9 பேருக்கு வலுக்கட்டாய சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+