ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு: கனிமொழிக்கு ஆதரவாக சாட்சியம் அளித்த கலைஞர் டிவி அமிர்தம்

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை விசாரித்து வரும் டெல்லி பாட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி. சைனி முன்னிலையில் கருணாநிதியின் சகோதரி மகனும் கலைஞர் டிவி தலைமை நிதி அதிகாரியுமான அமிர்தம் நேற்று நேரில் ஆஜராகி சாட்சியமளித்தார்..
அப்போது அவரிடம் சிபிஐ சிறப்பு வழக்கறிஞர் யு.யு. லலித் குறுக்கு விசாரணை செய்தார். அப்போது அமிர்தம், 2007-ம் ஆண்டு ஜூன் மாதம் கலைஞர் டிவி தொடங்கப்பட்டது. டிவி தொழிலில் கனிமொழி நாள்தோறும் பங்கெடுக்கவில்லை. நிறுவனத்தில் இயக்குநர் பொறுப்பேற்ற 20 நாட்களிலேயே அவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். திமுக மாநிலங்களவை உறுப்பினராக கனிமொழி நியமிக்கப்பட்டதால் இயக்குநர் பதவியை அவர் ராஜினாமா செய்ய நேர்ந்தது. அதன் பிறகு நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு கூட்டத்தில் கனிமொழி பங்கேற்கவில்லை. அவர் பதவி விலகிய 18 மாதங்களுக்கு பிறகுதான் சினியூக் நிறுவனத்தில் இருந்து கலைஞர் டிவி கடனுதவி பெற்றது'' என்றார்.
மேலும் கலைஞர் டிவி நிர்வாகத்தில் கனிமொழியின் தலையீடு நேரடியாகவும் மறைமுகமாகவும் இல்லை. அவரது தந்தையின் வலியுறுத்தலால்தான் கலைஞர் டிவி இயக்குநராக கனிமொழி பொறுப்பேற்றார் என்றும் அவர் கூறினார்.
கடந்த 2011-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமிர்தத்தை சிபிஐ விசாரித்தபோது, கலைஞர் டி.வி. நிறுவன இயக்குநர்களில் ஒருவராக கனிமொழி இருந்தார். ஆனால் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவில் இடம்பெற அவருக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் பெறுவதில் சில பிரச்னைகள் நிலவின. அதனால், 2007-ஆம் ஆண்டு ஜூன் 20-ஆம் தேதி தனது பதவியை கனிமொழி ராஜினாமா செய்தார். டி.வி. நிர்வாகத்தின் அன்றாட செயல்பாடுகளில் கனிமொழி ஆர்வத்துடன் பங்கெடுத்தார் என்று கூறியிருந்திருக்கிறார். இதனால் கலைஞர் டிவி செயல்பாட்டில் கனிமொழியின் பங்களிப்பை நிரூபிக்க அமிர்தத்தை மட்டுமே ஒரே சாட்சியாக சிபிஐ கருதியது.
இதனால்தான், அவரை வழக்கில் அரசு தரப்பு சாட்சியாக சிபிஐ சேர்த்தது. இந்த நிலையில், நீதிமன்றத்தில் அமிர்தம் நேற்று அளித்த சாட்சியம் கனிமொழிக்குச் சாதகமாகவும் அவருக்கு எதிரான சிபிஐ வழக்கை பலவீனப்படுத்தும் வகையிலும் அமைந்து விட்டதாகக் கூறப்படுகிறது.
ஸ்பெக்ட்ரம் வழக்கில் கனிமொழியை 2011-ஆம் ஆண்டு மே 20-ஆம் தேதி சிபிஐ கைது செய்தது. பின்னர் 2011-ஆம் ஆண்டு நவம்பர் 28-ஆம் தேதி டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீனில் விடுதலை செய்தது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications