”ப்ளீஸ்…இன்னைக்கு மட்டும் ஹாரன் அடிக்காதீங்க” : சென்னை போலீஸ் வேண்டுகோள்
சென்னை: ஒலி மாசுபாட்டைத் தடுக்க இன்று 16-ம் தேதியை ‘ஹாரன் எழுப்பாத தினமாக' கடைபிடிக்குமாறு வாகன ஓட்டிகளை மாநகர காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
இதுகுறித்து, பேஸ்புக் சமூக வலைதளத்தில் மாநகர காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், 'அலையின் ஓசை உள்பட பல ஓசைகளையும் நாம் ரசிக்கிறோம். அதே நேரம் வாகனங்களில் இருந்து எழுப்பப்படும் பலத்த இரைச்சல் நமக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதையும் உணர்வோம்.
இன்று மார்ச் 16-ம் தேதியை ஹாரன் எழுப்பாத தினமாக மோட்டார் வாகன ஓட்டிகள் கடைபிடிக்க வேண்டும்'. இவ்வாறு பேஸ்புக் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தி பேஸ்புக் தளத்தில் வெளியான முதல் 3 மணி நேரத்திலேயே 100-க்கும் மேற்பட்டவர்கள் இத்தகவலை பகிர்ந்து கொண்டுள்ளனர். 150-க்கும் மேற்பட்டவர்கள் ‘லைக்' கொடுத்துள்ளனர்.
‘உலக சுகாதார தினம்', 'லஞ்ச ஒழிப்பு தினம்', போல அனுமதிக்கப்படாத இடத்தில் வாகனங்களை பார்க்கிங் செய்யாத தினம் என்று ஒரு நாளை கடைபிடிக்கலாமே' என்றும் ஒருவர் கமெண்ட் பதிவு செய்துள்ளார்.
பெங்களூரில் ஒவ்வொரு திங்கள்கிழமையும் ‘ஹாரன் சத்தம் இல்லாத தினமாக' கடைபிடிக்கப்படுவது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் ஹாரன் சத்தத்தின் டெசிபல் அளவு (நேற்றைய நிலவரம்)
| இடம் | அதிகபட்சம் | குறைந்தபட்சம் |
| தி.நகர் | 88.4 | 45.9 |
| கிண்டி | 72 | 51.3 |
| எழும்பூர் | 66.42 | 44.1 |
-
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர்












Click it and Unblock the Notifications