சென்னை மெரினாவில் நள்ளிரவில் போராட்டம்- 20 சட்ட மாணவர்கள் கைது- தொடர் உண்ணாவிரதம்!

தமிழீழம் கோரி தமிழகத்தில் கடந்த ஒரு வார காலமாக மாணவர்கள் போராட்டம் தொடர்கிறது. இந்தப் போராட்டத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஆனால் விடுமுறை அறிவிக்கப்பட்டதற்கு பின்னரே போராட்டம் தீவிரமானது. கலை, அறிவியல் கல்லூரி மாணவர்களுடன் பொறியியல் மற்றும் மருத்துவ மாணவர்களும் பள்ளிக்கூட மாணவர்களும் இணைந்து கொண்டனர்.
இந்நிலையில் சென்னை அம்பேத்கர் சட்ட கல்லூரி மாணவர்கள் 20 பேர் திடீரென நேற்று மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலையருகில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அங்கு வந்த போலீசார் அனுமதி இன்றி போராட்டம் நடத்தக் கூடாது என்றனர். ஆனால் மாணவர்களோ மெழுகுவர்த்தி ஏந்தி அமைதியான முறையில் போராட்டம் நடத்துவோம் என்றனர். இதை ஏற்காத போலீசார் வலுக்கட்டாயமாக மாணவர்களை வெளியேற்றினர். அப்போது மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
மாணவர்கள் வேனில் ஏற்றப்பட்டு மயிலாப்பூரில் சமூக நலக் கூடம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கும் 20 பேரும் தொடர் உண்ணாவிரதத்தை மேற்கொண்டிருக்கின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications