கருணாநிதி நெருக்கடி.. ஐ.நா.வின் ஜெனீவா பிரிவின் இந்தியப் பிரதிநிதி டெல்லி விரைகிறார்!

ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்துள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை திமுக வலியுறுத்தியதையடுத்து வேண்டாவெறுப்பாக அதை மத்திய அரசு ஏற்றது.
இந் நிலையில் தன்னை நேற்று சந்தித்த 3 மத்திய அமைச்சர்களிடம் பேசிய திமுக தலைவர் கருணாநிதி, ஈழத் தமிழர்கள் மீது இலங்கை அரசு நடத்திய தாக்குதல்களைப் போர்க் குற்றங்கள் என்றும் இனப் படுகொலைகள் என்றும் பிரகடனப்படுத்த வேண்டும்; நம்பகத்தன்மை வாய்ந்த சுதந்திரமான பன்னாட்டு ஆணையம் ஒன்றை அமைத்து குறிப்பிட்ட வரையறைக்குள் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை தொடர்பாகவும், பன்னாட்டு மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்டமீறல்கள் தொடர்பாகவும் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய கருணாநிதி, மேலே சொன்ன விஷயத்தை நாடாளுமன்றத்திலும் தீர்மானமாக உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்திள்ளதாகக் கூறிய கருணாநிதி, மத்திய அமைச்சர்கள் குழுவும் ஆவன செய்வதாக உறுதியளித்துச் சென்றுள்ளது. இந்தத் தகவலை மத்திய அமைச்சர்கள் குழு உறுதியளித்ததாக நம்பித்தான் உங்களிடம் தெரிவிக்கிறேன் என்றார்.
இலங்கைப் பிரச்னையில் காங்கிரசுடனான இறுக்கம் தளர்ந்துவிட்டது என்று எடுத்துக் கொள்ளலாமா என்று நிருபர் ஒருவர் கேட்டதற்கு, இலங்கைத் தமிழர்களுக்கு நாங்கள் நினைத்ததெல்லாம் நடந்தால்தான் இறுக்கம் தளர்ந்ததாக அர்த்தம் என்றார் கருணாநிதி.
அமெரிக்க தீர்மானத்தில் நீங்கள் கேட்கும் திருத்தங்களை இந்தத் தருணத்தில் கொண்டு வருவது சாத்தியமானதா என்ற கேள்விக்கு, அமெரிக்க தீர்மானத்தில் கேட்கும் திருத்தங்களையும் இணைத்துக் கொண்டுவர வேண்டும் என்று திமுக ஏற்கெனவே வலியுறுத்திச் சொல்லியிருக்கிறது என்றார் கருணாநிதி.
இதை மத்திய அரசு செய்யாவிட்டால் காங்கிரசுடன் கூட்டணி நீடிக்காது என்றும் கருணாநிதி 3 அமைச்சர்களிடமும் கூறிவிட்டதாகத் தெரிகிறது.
இதனால் இலங்கைக்கு ஜால்ரா போடும் காங்கிரஸ் தலைமை மற்றும் மத்திய அரசு அதிகாரிகள் மத்தியில் அதிருப்தியும் இயலாமையும் நிலவுகிறது.
இதையடுத்து இது குறித்து விவாதிக்க ஐ.நாவின் ஜெனீவா பிரிவின் இந்தியப் பிரதிநிதி திலீப் சின்காவை டெல்லிக்கு வருமாறு மத்திய அரசு அழைத்துள்ளார். அவர், இன்று வருவார் என்று தெரிகிறது. அவர் வந்தவுடன் இந்தத் தீர்மானம் குறித்தும், திமுக கோரும் திருத்தங்கள் குறித்தும் அவருடன் வெளியுறவுத்துறை மற்றும் ரா அதிகாரிகள் ஆலோசனை நடத்துவர்.
இதன் பின்னர் தங்களது முடிவை அதிகாரிகள் வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித்திடம் தெரிவிப்பர். இதன் அடிப்படையிலும், ஆட்சியில் நீடிக்க திமுகவின் ஆதரவு தேவை என்ற நிதர்சனத்தை உணர்ந்த நிலையிலும், மத்திய அரசு முடிவுகளை எடுக்கும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications