15 ஆண்டு வாடகைதாரரா... அப்போ இனி அது உங்க வீடு: பஞ்சாப் அரசின் கலக்கல் திட்டம்
சண்டிகர்: தொழிலாளர்கள் மற்றும் குடிசைகளில் வசிப்பவர்கள் பயன்பெறும் வகையில், புதிய வீட்டு வசதி திட்டத்தை, பஞ்சாப் மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, ஒரு குடும்பத்தினர், தொடர்ந்து, 15 ஆண்டுகள், ஒரே வீட்டில் வசித்தால், அந்த வீடு, அவர்களுக்கு சொந்தமாக்கப்படும்.
பஞ்சாபில், கட்டுமான தொழில், சாலைத் தொழில் உள்பட, பல்வேறு தொழில்களில் ஈடுபடும் தொழிலாளர்கள், தங்களின் சொந்த ஊர்களை விட்டு விட்டு, வேறு ஊர்களில் இடம் பெயர்ந்து வசிக்கின்றனர்.
அதேபோல், சில நகரங்களில், கணிசமான மக்கள், குடிசைப் பகுதிகளிலும் வசித்து வசிக்கின்றனர். இவர்களின் நலனுக்காக, பிரகாஷ் சிங் பாதல் தலைமையிலான, சிரோன்மணி அகாலி தள அரசு, புதிதாக வீட்டு வசதி திட்டத்தை அறிவித்துள்ளது.
இதுகுறித்து அரசுத் தரப்பு தகவல்கள் கூறுகையில், இந்த திட்டம், முதலில், மொகாலி நகரில் செயல்படுத்தப்படவுள்ளது. இதன்படி, முதல் கட்டமாக, 15 ஆயிரம் வீடுகள் கட்டப்படும். ஒவ்வொரு வீடும், இரண்டு படுக்கை அறைகள் உடையதாக இருக்கும். இந்த வீடுகளுக்கான வாடகை, மாதத்துக்கு, 1,800லிருந்து, 2,000 வரை நிர்ணயிக்கப்படும்.
ஒரே குடும்பத்தினர், ஒரே வீட்டில், தொடர்ந்து, 15 ஆண்டுகள் வசித்தால், 16வது ஆண்டிலிருந்து, அவர்களுக்கு அந்த வீடு சொந்தமாக்கப்படும். அதற்கு பின், வாடகை கொடுக்க வேண்டிய அவசியமில்லை.
இடையிலேயே, வீட்டை காலி செய்தால், வேறு ஒருவருக்கு அந்த வீடு ஓதுக்கப்படும். இந்த நகரைத் தொடர்ந்து, மற்ற நகரங்களிலும், படிப்படியாக இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
மொகாலி நகரில், ஏராளமான தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊர்களை விட்டு, இடம் பெயர்ந்து வசிப்பதால், முதலில் இந்த நகரத்தில், இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது' என தெரிவித்தன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications