தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடித்த திமுக: நல்லகண்ணு
நெல்லை: தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடித்த கதையாக இப்போது தி.மு.க. மத்திய அரசில் இருந்து, வெளியேறியிருப்பது வேதனையையே அளித்திருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் ஆர். நல்லகண்ணு தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் நடைபெற்றுவரும் மாணவர்களின் போராட்டம் காரணமாகவே மத்திய அரசிலிருந்து திமுக வெளியேறியது என்றும் கருத்துக் கூறியுள்ளார்.
"தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு' சார்பில் பாளையங்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற மாணவர்களின் பெருந்திரள் தொடர் முழக்க போராட்டத்தை நிறைவு செய்து அவர் கூறியதாவது, ‘தமிழகம் முழுக்க புதன்கிழமை (மார்ச் 20) 1 கோடி பேரை திரட்டி காட்டுவதாக மாணவர்கள் கூட்டமைப்பு முடிவு செய்து அதன்படி போராட்டம் நடைபெற்றிருக்கிறது. இப் போராட்டத்தில் 1 கோடிக்கு மேற்பட்டோர் பங்கேற்றிருப்பதாக பத்திரிகையாளர்கள் தெரிவிக்கிறார்கள். இந்திய அளவில் எழுச்சி ஏற்பட்டிருக்கிறது. மத்திய அரசுக்கு நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
1967-ல் தமிழகத்தில் நடைபெற்ற ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை வெற்றிபெறச் செய்தது மாணவர்கள்தான். தற்போது நடைபெறும் மாணவர்கள் போராட்டத்துக்கு அரசியல் நோக்கமில்லை, பொய்யில்லை.
தமிழகம் முழுக்க நடைபெறும் மாணவர் போராட்டம் மத்திய அரசிலிருந்து தி.மு.க.வை வெளியேறச் செய்திருக்கிறது. 2009-ஆம் ஆண்டிலேயே வெளியே வந்திருந்தால் இந்த அளவுக்கு இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள். மத்திய அரசும் உரிய நடவடிக்கை எடுத்திருக்கும். தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடித்த கதையாக இப்போது தி.மு.க. வெளியேறியிருப்பது வேதனையையே அளிக்கிறது' என்றார் நல்லகண்ணு.
மேலும், திருநெல்வேலியில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு கல்லூரி மாணவர்களுக்கும், போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தியவர்களுக்கும் நினைவுப் பரிசுகளை அவர் வழங்கினார்.
-
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி?












Click it and Unblock the Notifications