இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை வலுவாக்க இந்தியா தவறி விட்டது: திமுக அதிருப்தி

ஐ.நா.மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் இன்று நிறைவேறியது. இருப்பினும் இதை எவ்வளவு நீர்த்துப் போகச் செய்ய முடியுமோ அவ்வளவுக்கு நீர்த்துப் போக வைத்து விட்டன இந்தியாவும், இலங்கையும்.
இந்தத் தீர்மானத்தை வலுவாக்க வேண்டும் என்று தமிழக கட்சிகள் கோரி வந்தன. மாணவர்களும் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வந்தனர். திமுகவும் இதுதொடர்பாக மத்திய அரசை நிர்ப்பந்தப்படுத்தி வந்தது.
இலங்கைக்கு எதிரான கடுமையான வாசகங்களுடன் கூடியதாக இந்த தீர்மானத்தை மாற்ற வேண்டும். இலங்கை அரசும், அதன் ராணுவமும் நடத்திய இனப்படுகொலை குறித்து அதில் இடம் பெற வேண்டும். சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும். இதுதொடர்பாக அமெரிக்காவை வலியுறுத்தி இவற்றைச் செய்ய வேண்டும் என்று திமுக கோரி வந்தது.
ஆனால் இது எதையுமே மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. இந்த திருத்தங்கள் எதையும் அது மேற்கொள்ள முயலவும் இல்லை. கடைசியில் நீர்த்துப் போன நிலையிலேயே இந்தத் தீர்மானம் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தப் பிரச்சினை காரணமாகத்தான் மத்திய அரசுக்குக் கொடுத்து வந்த ஆதரவையும் திமுக வாபஸ் பெற்றது என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் நீர்த்துப் போன நிலையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து திமுக அதிருப்தி தெரிவித்துள்ளது. இதுகுறித்து திருச்சி சிவா எம்.பி கூறுகையில், இந்தத் தீர்மானம் நீர்த்துப் போய் விட்டது. இதை வலுவாக்க அரசு தவறி விட்டது, தோல்வி அடைந்து விட்டது என்றார்.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications