9 ஆண்டுகள்தான், ஆனால் திமுக செய்த சாதனைகளைப் பாரீர்.. பெருமிதப்படும் திருச்சி சிவா!
சென்னை: மத்திய அரசுடன், கடந்த 9 ஆண்டு காலமாக கூட்டணியில் இருந்த திமுக தமிழகத்திற்கு எத்தனையோ திட்டங்களைக் கொண்டு வந்துள்ளது. எத்தனையோ சாதனைகளைப் படைத்துள்ளது என்று அக்கட்சியின் ராஜ்யசபா எம்.பி. திருச்சி சிவா கூறியுள்ளார்.
கடந்த 9 வருடமாக காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்து வந்த திமுக தற்போது அதிலிருந்து விலகி விட்டது. இந்த காலகட்டத்தில் அது பல்வேறு முக்கிய அமைச்சர் பொறுப்புகளை அது வகித்துள்ளது.
இந்த உறவு தற்போது முறிந்துள்ளது - தற்காலிகமாகத்தான் என்று விஷயம் தெரிந்தவர்கள் கிசுகிசுப்பது தனிக் கதை - இந்த நிலையில், திமுக தமிழகத்திற்கு என்னென்ன செய்தது என்பதை திருச்சி சிவா பட்டியலிட்டுள்ளார்.

செம்மொழி தமிழ்
தமிழ்மொழிக்கு செம்மொழி அந்தஸ்து, சேது சமுத்திர திட்டம் என பல்வேறு நல்ல திட்டங்களை தமிழகத்துக்கு பெற்று வந்த பெருமை தி.மு.க.வுக்கு உண்டு. இதில் சேது சமுத்திரத திட்டத்துக்கு பல்வேறு முட்டுக்கட்டை ஏற்பட்டதால் பணிகள் பாதியில் நிற்கிறது.

தங்க நாற்கர சாலைகள்
தமிழ்நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை அகலப்படுத்தி 4 வழி சாலையாக மாற்றியது. தங்க நாற்கர சாலையை விரைவு படுத்தி முடித்தது. மதுரவாயல்-துறைமுகம் இடையே ரூ.1655 கோடியில் பறக்கும் சாலை திட்டம், சென்னை கத்திப்பாரா மேம்பாலம், கோயம்பேடு மேம்பாலம், பாடி மேம்பாலம், மீனம்பாக்கம் விமான நிலைய மேம்பாலம் என சாலை அபிவிருத்தியில் தமிழ்நாட்டிற்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுத்தியது.

கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம்
சென்னை விமான நிலைய விரிவாக்கம், நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், கிழக்கு கடற்கரை சாலையில் கடல் சார் பல்கலைக் கழகம், தாம்பரம் தேசிய சித்த மருத்து வமனை உள்பட பல்வேறு திட்டங்களை எடுத்துக் காட்டாக கூறலாம்.

தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்
மத்திய அரசின் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் சிறந்த முறையில் செயல்படுத்தியது என்ற பெருமை திமுகவுக்கு உண்டு. சுப்ரீம் கோர்ட்டே இதை பாராட்டியது.

சென்னைக்கு மெட்ரோ ரயில்
சென்னை மெட்ரோ ரயில் திட்டம், ஓரகடத்தில் வாகனங்களுக்கான தேசிய ஆராய்ச்சி மையம் மற்றும் பல்வேறு தொழிற்சாலைகள் கொண்டு வந்தது.

செல்போன் கட்டணத்தைக் குறைத்தோம்
இன்று பாமரர் கையிலும் செல்போன் இருக்கும் வகையில் கட்டணத்தை குறைத்து இந்தியா முழுவதும் குறைந்த கட்டணத்தில் பேச வழிவகை செய்தது தி.மு.க.வின் சாதனையாகும். இந்த பட்டியலை அடுக்கி கொண்டே போகலாம் என்றார் சிவா.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications