டெல்லியில் ஏ.கே.47 துப்பாக்கிகள், வெடிபொருட்கள் பறிமுதல் -ஒருவர் சிக்கினார்-தீவிரவாதியா?
டெல்லி: டெல்லி ஜும்மா மசூதி அருகே போலீஸார் நடத்திய அதிரடி சோதனையின்போது ஒரு நபர் ஏ.கே.47 துப்பாக்கிகள், வெடிபொருட்களுடன் சிக்கினார். அந்த நபர் தீவிரவாதியாக இருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
நேற்று இரவு அந்தப்பகுதியில் டெல்லி காவல்துறையின் சிறப்புப் படைப் பிரிவினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஒரு இடத்தில் பெருமளவிலான வெடிபொருட்கள் சிக்கின. மேலும் பல ஏ.கே.47 துப்பாக்கிகளும் சிக்கின.
இதையடுத்து போலீஸார் ஒரு நபரைப் பிடித்தனர். அவர் தீவிரவாதியாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. உ.பி. மாநிலம் கோரக்பூரில் சமீபத்தில் ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதி ஒருவன் கொடுத்த தகவலின் பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
டெல்லியில் கைது செய்யப்பட்ட நபரின் பெயர் லியாகத் ஷா. இவர் ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாராவைச் சேர்ந்தவர். இவருக்கு கடந்த 15 வருடமாக ஹிஸ்புல் அமைப்புடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. அவரை போலீஸார் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
டெல்லியில் தீவிரவாதத் தாக்குதல் திட்டம் தீட்டப்பட்டிருக்கலாமோ என்ற சந்தேகமும் வலுத்துள்ளதால் தலைநகரில் போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications