பாலச்சந்திரன் அண்ணனை கொன்னுட்டாங்க, நாங்க ஏதாச்சும் செய்யனும்.. ஆவேசத்துடன் உருமிய சேலம் சிறார்கள்
சேலம்: சின்னப் பைன் என்றுகூட பாராமல், எங்க பாலச்சந்திரன் அண்ணனை கொன்று விட்டார்கள். எங்க அண்ணன் சாகும்போது வீரமாகத்தான் இறந்திருக்காரு. நாங்க ஏதாச்சும் செய்யனும் என்று ஆவேசத்துடன் கூறியபடி ராஜபக்சேவுக்கு எதிராக பாலச்சந்திரன் படம் பிடித்து போராட்டம் நடத்திய சிறார்களைப் பார்த்து சேலமே சிலிர்த்துப் போனது.
சலூன் கடை முதல் பல்கலைக்கழக மாணவர்கள் வரை தமிழகமே கொந்தளித்துப் போய் நிற்கிறது. ஐடி நிறுவனம் முதல் ஐடிஐ மாணவர்கள் வரை அத்தனை பேரும் தங்களது உணர்வுகளை ஏதாவது ஒரு வழியில் வெளிப்படுத்தி நாங்கள் இருக்கிறோம் என்பதை ஈழத் தமிழர்களுக்கு உணர்த்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சேலத்தில் சின்னஞ் சிறார்களும் போராட்டக் களத்தில் குதித்துள்ளனர். சேலம் புதிய பேருந்து நிலையம் முன் உள்ள ஆட்டோ ஸ்டேண்டில் கையில் பதாதைகளுடன், நெஞ்சில் பாலச்சந்திரன் படத்தையும் தாங்கி 20க்கும் மேற்பட் சிறார்கள் திரண்டு நின்று தங்களது பிஞ்சுக் குரலில் வீராவேசமாக போட்ட கோஷத்தைப் பார்த்து சாலையில் சென்றோர் ஆச்சரியமடைந்து நின்று விட்டனர்.

நாங்களும் எதவாது செய்யனும்னு தான் இங்க வந்தோம். எங்க அண்ணனை கொன்றது, எங்க சொந்தகாரங்களை எல்லாம் கொன்னது அந்த ராஜபக்சேதான். ராஜபக்சேவை தூக்குல போடணும் அதுவரை நாங்களும் போராடுவோம் என்றார்.
இடிந்தகரையிலும் சிறார்கள் போராட்டம்
அதேபோல கூடங்குளம் அருகே இடிந்தகரையிலும் தமிழ் ஈழத்திற்கு ஆதரவு தெரிவித்து ஏராளமான சிறார்கள் ,மாணவ மாணவியர் பாலச்சந்திரன் படத்தைத் தாங்கியும், முகமூடி அணிந்தபடியும் ஆவேசமாக கோஷமிட்டுப் போராட்டம் நடத்தினர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications