உள்தாள் இணைப்பு ஒட்டாத 3 லட்சம் ரேசன் கார்டுகள் நீக்கப்படும் அபாயம்
சென்னை: தமிழகத்தில் 3 லட்சம் ரேஷன் கார்டுகள் நீக்கப்படும் அபாயம் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது புழக்கத்தில் உள்ள ரேசன் கார்டுகளின் ஆயுளை வருகிற டிசம்பர் வரை நீட்டித்து அரசு உத்தரவிட்ட தையடுத்து ரேசன் கார்டுகளுக்கு உள்தாள் இணைப்பு ஓட்டும் பணி நடந்து வருகிறது.
கடந்த 15-ந் தேதி வரை நடந்த இந்த பணியில் 2 லட்சத்து 95 ஆயிரத்து 500 பேர் உள்தாள் இணைப்பு ஒட்டவில்லை. இந்த நிலையில் உள்தாள் இணைக்காத ரேசன் கார்டுகளை செல்லாதவை என்று அறிவித்து நீக்க அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி மாநிலம் முழுவதும் உள்ள 2.95 லட்சம் ரேசன் கார்டுகளும் போலி என்று அறிவிக்கப்பட்டு நீக்கப்படுகிறது. இதுகுறித்து வழங்கல்துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது:-
'தமிழகம் முழுவதும் ஜனவரி முதல் 2? மாதங்களாக ரேசன் கார்டுகளில் உள்தாள் ஓட்டும் பணி நடந்து வந்தது. இதுவரை புதுப்பிக்கப்படாத கார்டுகளை செல்லாததாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த கார்டுகளுக்கு ஏப்ரல் முதல் அரிசி, மண்ணெண்யை, சர்க்கரை உள்ளிட்ட எந்த பொருட்களும் வழங்கப்படாது.
சில இடங்களில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் முகாம்களில் வெளியூர் சென்றிருந்ததாலும், சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் இருந்ததாலும் ரேசன் கார்டுகளில் உள்தாள் ஒட்ட முடியவில்லை என மனு கொடுத்துள்ளனர். அது போன்ற கார்டுகளுக்கு உரிய விசாரணைக்கு பின்னர் உள்தாள் ஒட்டப்படும்' என்று தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications