மூணாறு அருகே சுற்றுலா பேருந்து கவிழ்ந்தது- 6 மாணவர்கள் உட்பட 7 பேர் பலி!
Subscribe to Oneindia Tamil
மூணாறு: மூணாறு அருகே சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 மாணவர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். 33 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருவனந்தபுரம் வல்லநாடு சாராபாய் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் இடுக்கி மாவட்டத்தில் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டிருந்தனர். இன்று தேக்கின்கானம் என்ற இடம் அருகே மாணவர்களின் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே ஓட்டுநர் மற்றும் 6 மாணவர்கள் என 7 பேர் பலியாகினர். ஒரு வளைவில் பேருந்தை ஓட்டுநர் திருப்ப முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.
இதில் படுகாயமடைந்த 33 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications