தேமுதிகவின் ராஜ்யசபா எம்.பி. கனவுக்கு வேட்டு வைத்த ஜெயலலிதா

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபையில் தேமுதிக எம்.எல்.ஏக்கள் 6 பேரை ஓராண்டு காலத்துக்கு நீக்குவதாக அறிவிக்கப்பட்டிருப்பதன் மூலம் அக்கட்சியின் ராஜ்யசபா கனவு தகர்ந்து போயுள்ளது.

அதிமுகவின் மைத்ரேயன், இளவரசன், திமுகவின் கனிமொழி, திருச்சி சிவா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா, காங்கிரஸ் கட்சியின் ஞானதேசிகன் ஆகியோரது ராஜ்யசபா எம்.பி. பதவிக் காலம் வரும் ஜூலை மாதம் முடிவடைகின்றது. ஒரு ராஜ்யசபா எம்.பிக்கு 33 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை. இந்த 33 என்ற எண்ணிக்கையை வைத்தே அரசியல் சதுரங்கம் ஆடப்பட்டு வருகிறது.

ராஜ்யசபா எம்.பி. கனவு

ராஜ்யசபா எம்.பி. கனவு

தேமுதிக அதிமுகவுடன் கூட்டணிஅமைத்து 29 எம்.எல்.ஏக்களைப் பெற்ற போது நிச்சயமாக அதிமுக ஆதரவுடன் விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவோ அல்லது அவரது மைத்துனர் சுதீஷோ எம்.பியாகிவிடுவார் என்றுதான் சொல்லப்பட்டது. டெல்லியில் தமக்கு ஒரு பிரதிநிதி இருப்பதன் மூலம் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து விடலாம் என்றும் தேமுதிக தலைமை கருதி வந்தது.

முதலில் காங்கிரஸ்.. பின்னர் மார்க்சிஸ்ட்

முதலில் காங்கிரஸ்.. பின்னர் மார்க்சிஸ்ட்

தேமுதிகவின் இந்தக் கனவில் முதல் அடியாக அதிமுகவுடனான உறவு முறிந்தது. உறவு முறிந்து போன நிலையில் கலங்கிக் கிடந்த தேமுதிக, எப்படியாவது 5 எம்.எல்.ஏக்களை வைத்திருக்கும் காங்கிரஸ் கட்சியின் உதவியுடனாவது ஒரு ராஜ்யசபா சீட்டைப் பெற்றுவிடலாம் என ஆறுதலடைந்திருந்தது.

இந்நிலையில்தான் தேமுதிகவின் 4 எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து தனி அணியாக உருவெடுத்து குடைச்சலைக் கொடுத்தனர். இதனால் தேமுதிகவின் ராஜ்யசபா எம்.பி. கனவு மேலும் சிக்கலானது. ஆனாலும் தேமுதிக நம்பிக்கையைக் கைவிடவில்லை. 29 பேரில் 4 பேர்தானே போனார்கள்... 25 எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள்... மார்க்சிஸ்ட் கட்சியின் 10 எம்.எல்.ஏக்கள் ஆதரவைப் பெற்றாலே எப்படியும் ஒரு ராஜ்யசபா சீட் கன்பார்ம் என்ற கோதாவில்தான் கவலைப்படாமல் இருந்தது தேமுதிக.

இன்னொரு எம்எல்...

இன்னொரு எம்எல்...

இதற்கும் வேட்டு வைக்கும் விதமாக காவிரியே பாயாத செங்கம் தொகுதி தேமுதிக எம்.எல்.ஏ, காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட வைத்ததற்காக முதல்வர் ஜெயலலிதாவை நேரில் பார்த்து நன்றி சொன்னார். ஆக தேமுதிகவின் அதிருப்தி எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 5 ஆனது. தேமுதிகவின் எண்ணிக்கை 24 ஆகக் குறைந்தது.

கனவு தகர்ப்பு

கனவு தகர்ப்பு

இதனால் 24 எம்.எல்.ஏக்களை வைத்துக் கொண்டு லோக்சபா தேர்தலில் கூட்டணி வைத்துக் கொள்வோம் என்ற அடிப்படையில் கடந்த சில மாதங்களாக திமுகவுடன் ஒரு ராஜ்யசபா சீட்டுக்காக ரகசிய பேச்சுக்களையும் தேமுதிக நடத்தி வந்தது. ஆனால் தேமுதிகவுக்கு இப்படி ஒரு நினைப்பு கனவிலும் வரவேகூடாது என்று கருதியோ கங்கணம் கட்டியோ என்னவோ சட்டசபை அடிதடியை சாக்காக வைத்து இப்போது 6 எம்.எல்.ஏக்களை ஒரு ஆண்டுக்கு சஸ்பென்ட் செய்துவிட்டனர்.
இதனால் தேமுதிகவின் எண்ணிக்கை 18 ஆகக் குறைத்துவிட்டது. இனி காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சியோடு சேர்ந்தாலும் ராஜ்யசபா எம்.பியாக முடியாது. தேமுதிகவின் ராஜ்யசபா கனவு தகர்ந்து போய்விட்டது என்றே கூறலாம்.

கடைசி வாய்ப்பு...

கடைசி வாய்ப்பு...

ஒரே வாய்ப்பு 23 எம்.எல்.ஏக்களை வைத்திருக்கும் திமுகதான். காங்கிரஸை கழற்றிவிட்ட நிலையில் இதுதான் சந்தர்ப்பம் என நினைத்து திமுக தற்போது தேமுதிகவுர்ரு ஆதரவு கொடுத்து லோக்சபா தேர்தலுக்கான கூட்டணிக்கு அடித்தளம் போட்டால் மட்டுமே விஜய்காந்தின் ராஜ்யசபா கனவு நினைவேறலாம்!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+