திருச்சியிலிருந்து மலேசியாவுக்கு 10 கிலோ போதை பொருள் கடத்தல்: பெண் உள்பட இருவர் கைது
திருச்சி: திருச்சியில் இருந்து மலேசியாவிற்கு ரூ.2 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்களை கடத்த முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 10கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னையைச் சேர்ந்த ஸ்ரீலதா தேவி மற்றும் நாசர் ஆகிய இருவரும் திருச்சியில் இருந்து ஏர் ஏஷியா விமானம் மூலம் மலேசியா செல்லவிருந்தனர்.அவர்களின் உடமைகள் சோதனை செய்யப்பட்ட போது, சுமார் 10 கிலோ எபித்தின் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கைதான இருவருக்கும் சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர்கள். அவர்கள் யாரிடம் போதை பொருளை வாங்கி கடத்தினார்கள். மலேசியாவில் யாரிடம் கொடுக்க சென்றார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதைத் தொடர்ந்து அவர்களிடம் வான் நுண்ணறிவுப்பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கடந்த இரண்டு வருடங்களில் இது போன்ற போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக ஐந்து வழக்குகள் பதிவாகி உள்ளன.












Click it and Unblock the Notifications