திமுக செயற்குழு கூட்டத்தை புறக்கணித்து மனைவியுடன் மதுரை சென்ற அழகிரி

மத்திய அரசில் இருந்தும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்தும் திமுக கடந்த வாரம் வெளியேறியது. இதையடுத்து திமுக மத்திய அமைச்சர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இந்த சூழலில் இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயற்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தலைமையில் நடந்தது.
இந்நிலையில் நேற்று வரை சென்னையில் இருந்த முன்னாள் மத்திய அமைச்சரும், தென் மாவட்ட திமுக பொறுப்பாளருமான மு.க.அழகிரி இன்று காலை மதுரைக்கு சென்று விட்டார்.
மத்திய அரசில் இருந்து திமுக விலகுவது குறித்து தன்னிடம் கலந்தாலோசிக்கவில்லை என்பதால் அழகிரி அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்பட்டது. இதையடுத்து அவர் இன்றைய செயற்குழு கூட்டத்திற்கு வருவாரா மாட்டாரா என்று பலரும் யூகித்துக் கொண்டிருந்த நிலையில் அவர் மதுரைக்கு சென்று விட்டார். இதனால் அவர் கூட்டத்தை புறக்கணித்துள்ளது உறுதியாகியுள்ளது.
ஆனால் அழகிரியின் தீவிர ஆதரவாளர்களான மன்னன், தளபதி உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications