இலங்கை தமிழர் பிரச்சனை: திமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் வெளிநடப்பு
சென்னை: இலங்கை தமிழர் பிரச்சனையில் திமுக தூரோகம் இழைத்துவிட்டது என்ற அதிமுகவின் குற்றச்சாட்டை கண்டித்து திமுக உறுப்பினர்கள் இன்று சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று 2013-2014 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையின் மீது பேசிய அதிமுக பெண் எம்.எல்.ஏவும் துரையூர் சட்டமன்ற உறுப்பினருமான இந்திரா காந்தி, இலங்கை தமிழர்களுக்கு திமுக தலைவர் கருணாநிதி கருணாநிதி தூரோகம் இழைத்துவிட்டதாக குற்றஞ்சாட்டினார்.
அதிமுகவின் இந்த குற்றச்சாட்டிற்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். திமுக சார்பில் பேசிய உறுப்பினர் சக்கரபாணி, 1956 ஆம் முதல் இலங்கை தமிழர்களுக்கு பிரச்சனையில் திமுக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக கூறினார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன் மற்றும் வளர்மதி ஆகியோர், இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கும், அந்த இனமே அழிவதற்கும் திமுக தான் காரணம் என்று கூறினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். ஏற்கனவெ இன்று காலை தேமுதிக உறுப்பினர்கள் 6 பேர் ஒரு ஆண்டு சஸ்பென்ட் செய்யப்பட்டதை கண்டித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்திருந்தனர்.
-
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
“எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை.. லாலலா”.. ஒன்று சேர்ந்த அணிகள்.. மீண்டும் எடப்பாடி பவர்! -
திமுக கூட்டணி ஓவர்! முற்போக்கு பிராண்டிங்கை தட்டிப்பறித்த விஜய்! அறிவாலயத்தை அலறவிடும் புது அஸ்திரம் -
ஃபேக் நியூஸ்.. தூக்கம் தொலைத்த திமுக நிர்வாகிகள்.. களம் இறங்கிய திமுக தலைமை.. வில்சன் எம்பி அதிரடி -
குதிரை வேகத்தில் குதிரை பேரம்! இந்த கண்றாவி காட்சியை பார்க்கத்தான் ஓட்டு போட்டார்களா? -மு.க.ஸ்டாலின் -
வேலுமணி ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் ராஜினாமா! எடப்பாடி பழனிசாமிக்கு பேரதிர்ச்சி! -
தலைமைச் செயலகத்தை தவெக கட்சி அலுவலகமாக மாற்றுவதா? திமுக எம்பி வில்சன் கண்டனம் -
கோவை சிறுமி விவகாரத்தை.. திமுகவுடன் தொடர்புபடுத்துவதா? ஆர்.எஸ்.பாரதி கண்டனம் -
வாட் ப்ரோ.. இட்ஸ் வெரி ராங் ப்ரோ! திராவிட மாடல் 2.0 ஆட்சி தான் தவெக! அடித்து துவைத்த அர்ஜுன் சம்பத் -
“கூவத்தூர் மாடல் மறந்து போச்சா? தோல்வியை மறைக்க அரசு மீது பழிபோடுகிறார்” - எடப்பாடிக்கு தவெக பதிலடி -
அதிமுக ரெண்டுபட்டா விஜய்க்கு தான் கொண்டாட்டம்! பஞ்சாயத்தை கூட்டிய எடப்பாடி.. வேலுமணி வைத்த டிமாண்ட்! -
எடப்பாடினு சொன்னாலே பயம் வரனும்.. ஹோட்டல் மீட்டிங்கில் வெடித்த இபிஎஸ்! விஜய்க்கு லட்டு போல் சான்ஸ்!












Click it and Unblock the Notifications