கெயில் நிறுவனத்திற்கு எதிர்ப்பு… விவசாயிகளுக்கு ஆறுதல் தரும் அறிவிப்பு: வைகோ

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் உள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வையே பாழ்படுத்தும் விதத்தில், விவசாய நிலங்களின் ஊடே எரிவாயு கொண்டுசெல்லும் குழாய்களை அமைக்க கெயில் நிறுவனம் அக்கிரமமான ஒரு திட்டத்தைச் செயல்படுத்த முனைந்தது.
விவசாயிகளின் எதிர்காலம் அடியோடு நாசமாகின்ற ஆபத்தில் இருந்து அவர்களைப் பாதுகாக்கின்ற விதத்தில், தமிழக முதல் அமைச்சர் அவர்கள் மிகச் சரியானதும், மக்கள் நலனைக் காப்பதுமான சீரிய முடிவினை எடுத்து சட்டமன்றத்தில் அறிவித்து உள்ளார்.
விவசாய நிலங்களின் வழியாக எரிவாயுக் குழாய்களை அமைக்கக்கூடாது; நெடுஞ்சாலைகள் ஓராமாகவே குழாய்களைப் பதிக்க வேண்டும்; விவசாய நிலங்களில் தோண்டிய குழிகளை கெயில் நிறுவனமே சமன்படுத்தி, ஏற்பட்ட இழப்புகளுக்கு நட்ட ஈடும் வழங்க வேண்டும்; பதிக்கப்பட்ட குழாய்களை நிலங்களில் இருந்து உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என முதல்வர் அறிவித்து இருப்பது, விவசாயிகளின் கண்ணீரைத் துடைத்து ஆறுதலைத் தந்து உள்ளது.
கெயில் நிறுவனத்தின் தான்தோன்றித்தனமான போக்கைத் தடுத்து, விவசாயிகளைக் காப்பதற்கு தமிழக முதல் அமைச்சர் அவர்கள் மேற்கொண்ட இந்த மிகச் சரியான நடவடிக்கையை வரவேற்கிறேன் இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications