3வது அணிக்கு வாய்ப்பே இல்லையாம்: காங்கிரஸ், பாஜக பாடும் 'உதறல் கோரஸ்'
டெல்லி: தேசிய அளவில் மூன்றாவது அணி அமைப்போம் என்று சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் அழைப்பு விடுத்திருப்பது நடக்கப் போவது இல்லை என்று காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்து வருகிறது சமாஜ்வாடி கட்சி. சமாஜ்வாடி கட்சியின் ஆதரவு இல்லாமல் போனால் மத்திய அரசு கவிழ்ந்துவிடும் நிலையே இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக சமாஜ்வாடி கட்சி தரப்பில் மத்திய அரசுக்கு எதிரான கருத்தே தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இதன் உச்சமாக காங்கிரஸ், பாரதிய ஜனதா அல்லாத ஒருமித்த கருத்து கொண்ட கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்று சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் மூன்றாவது அணி அமைக்க அழைப்பு விடுத்திருந்தார்.
இதுகுறித்து காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரஷித் ஆல்வி கூறுகையில், மூன்றாவது அணிக்கு வாய்ப்பு இருப்பதாக நான் கருதவில்லை. மூன்றாவது அணி ஆட்சி அமைத்தால் அது விரைவிலேயே கவிழ்ந்து விடுகிறது என்பதுதான் வரலாறு. மூன்றாவது அணியை ஒருபோதும் மக்கள் ஏற்கமாட்டார்கள் என்றார்.
பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் பல்பீர் புஞ்ச் கருத்து தெரிவிக்கையில், மூன்றாவது அணி என்பது செய்தியில் அடிபட்டுக்கொண்டிருக்கும். ஆனால் அது நிறைவேறாது. அப்படி ஒரு அணி உருவாகாது என்றார்.
இப்படி ஒரு அணி உருவானால் காங்கிரசும் பாஜகவும் ஆட்சிக்கு வர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் எல்லா விவகாரங்களிலும் வேறுபடும் இந்த கட்சிகளும் மூன்றாவது அணி விஷயத்தில் மட்டும் இரண்டும் சேர்ந்து கோரஸ் பாடுகின்றன.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
கர்நாடக முதலமைச்சராக தேர்வாகும் டி.கே.சிவக்குமார்.. பெங்களூரில் இன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்!












Click it and Unblock the Notifications