இத்தாலி 'கொலைகார' மாலுமிகள் வழக்கு: பாட்டியாலா சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை
டெல்லி: இந்திய மீனவர்களை சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இத்தாலி கடற்படை வீரர்கள் இருவர் மீதான வழக்கை, பாட்டியாலா நீதிமன்றம் விசாரிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இங்கு தான் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கும் விசாரிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2012ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கேரள கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 2 மீனவர்கள் மீது, அந்த வழியாக சென்ற என்ரிகா லெக்ஸி கப்பலில் இருந்த இத்தாலி கடற்படை வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் மீனவர்கள் இருவரும் உயிரிழந்தனர்.
இது தொடர்பாக இத்தாலி கடற்படை வீரர்கள் இருவரை கைது செய்த கேரள காவல்துறை, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.
இந்த நிலையில், இத்தாலி தேர்தலில் வாக்களிப்பதற்காகச் சென்ற கடற்படை வீரர்கள் இருவரும், பல்வேறு சர்ச்சைகளுக்குப் பின்னர், கடந்த 22ம் தேதி மீண்டும் இந்தியா திரும்பினர். இது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில், சிறப்பு நீதிமன்றம் அமைக்கும்படி டெல்லி உயர்நீதிமன்றத்தை மத்திய அரசு, கடந்த 23ம் தேதி கேட்டுக் கொண்டது.
இதனை பரிசீலித்த டெல்லி உயர்நீதிமன்றம், பாட்டியாலா நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதன்மை மெட்ரோபாலிடன் நீதிபதி, இத்தாலி கடற்படை வீரர்கள் தொடர்பான வழக்கை விசாரிப்பார் எனத் தெரிவித்துள்ளது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications