பாஜகவில் இருந்து கர்நாடகா அமைச்சர் ரேணுகாச்சார்யா நீக்கம்
பெங்களூர்: கர்நாடகாவில் எதியூரப்பா ஆதரவு அமைச்சரான ரேணுகாச்சார்யா பாஜகவில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.
கர்நாடகா சட்டசபை தேர்தல் மே 5-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்வதில் பாஜக மும்முரம் காட்டி வருகிறது. இந்நிலையில் அமைச்சர் ரேணுகாச்சார்யா நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில் முன்னாள் முதல்வர் சதானந்த கவுடாவை கடுமையாக விமர்சித்தார்.
இது பற்றி அவர் கூறுகையில், சதானந்தா முதல்வராக இருந்த போதும் எம்.பி.யாக இருந்த போதும் நானே அவருக்கு நிறைய பணம் கொடுத்திருக்கிறேன். அவர் ஒன்றும் ஹரிச்சந்திரன் அல்ல. இதற்காக எந்த கடவுள் முன்பும் சத்தியம் செய்ய தயாராக இருக்கிறேன் என்றார்.
மேலும் பாஜக அமைப்பு செயலாளர் சந்தோஷ், துணை பதிவாளர்கள் பதவி நியமனத்துக்கு நிறைய பணம் வாங்கியுள்ளார் என்றார்.
இதேபோல் கடந்த சில வாரங்களாக குறிப்பாக சதானந்தா கவுடாவை இலக்கு வைத்து அவர் விமர்சனம் செய்து வந்ததால் அவர் பாஜகவில் இருந்து விலகி எதியூரப்பாவின் கர்நாடகா ஜனதா கட்சிக்கு தாவுவார் என்று கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில் கட்சிக்கும், கட்சித் தலைமைக்கும் எதிராக செயல்பட்டதாகவும், அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கையாக அவர் பாஜக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
மதுரையை சேர்ந்தவர்.. கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாரின் செயலாளராக தமிழர் நியமனம்.. யார் இவர்? -
செல்போன் ஸ்விட்ச் ஆஃப்.. கர்நாடக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பெங்களூர் எம்எல்ஏ மாயம்.. தமிழ்நாட்டில் பதுங்கல்? -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா












Click it and Unblock the Notifications