ஐ.பி.எல்: இலங்கை வீரர்களை நீக்காவிட்டால் மைதானங்களை முற்றுகையிடுவோம்... மாணவர்கள் எச்சரிக்கை
சென்னை: ஐ.பி.எல்.அணிகளில் இருந்து இலங்கை கிரிக்கெட் வீரர்களை ஒட்டுமொத்தமாக நீக்க வேண்டும் இல்லாவிட்டால் மைதானங்களை முற்றுகையிடுவோம் என்று மாணவர்கள் கூட்டமைப்பினர் எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.
6-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 3-ந்தேதி தொடங்கி மே 26-ந்தேதி வரை சென்னை உள்பட இந்தியாவின் 12 நகரங்களில் நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட்ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் உள்பட 9 அணிகள் விளையாடுகின்றன. ஐ.பி.எல். போட்டியில் விளையாட இலங்கையைச் சேர்ந்த 13 வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை தவிர மற்ற 8 அணிகளிலும் இலங்கை வீரர்கள் இடம் பெற்று உள்ளனர்.

76 போட்டிகளிலும் விளையாட தடை
ஐ.பி.எல். போட்டியில் மொத்தம் 76 ஆட்டம் நடக்கிறது. இதில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 8 லீக் ஆட்டம் மற்றும் பிளேஆப் சுற்றின் 2 ஆட்டம் ஆக மொத்தம் 10 ஆட்டங்கள் நடக்கிறது.
இனப்படுகொலையில் ஈடுபட்ட இலங்கைக்கு எதிராக தமிழ்நாட்டில் போராட்டம் தீவிரம் அடைந்து உள்ள நிலையில் சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிகளில் இலங்கை வீரர்கள் விளையாட எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
போட்டிகளுக்கு இடையூறு
இலங்கை வீரர்கள் சென்னையில் விளையாடினால் போட்டிகளுக்கு இடையூறு செய்வோம் என்று தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு கடும் எச்சரிக்கை விடுத்தது.
சென்னையில் விளையாடவில்லை
முதல்வரும் இது தொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதினார். இதனையடுத்து சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று ஐ.பி.எல். அமைப்பு அதிகாரபூர்வமாக அறிவித்தது. இதை ஐ.பி.எல். அமைப்பின் தலைவரும், பாராளுமன்ற விவகார துறை ராஜாங்க மந்திரி ராஜீவ் சுக்லா அறிவித்தார்.
அனைவரும் நீக்கவேண்டும்
இந்த நிலையில் இலங்கை வீரர்கள் இந்தியாவில் எந்த இடத்திலும் ஐ.பி.எல். போட்டியில் விளையாடக் கூடாது என்று மாணவர் கூட்டமைப்பு எச்சரித்து உள்ளது. அனைத்து ஐ.பி.எல். அணிகளும், இலங்கை வீரர்களை நீக்க வேண்டும் என்றும் மாணவர்கள் கூட்டமைப்பு புதிய நிபந்தனை விதித்து வலியுறுத்தி உள்ளது.
சென்னையில் மட்டும் இலங்கை வீரர்கள் ஐ.பி.எல். போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இலங்கை வீரர்களுக்கு தடை விதிக்க வேண்டும். இது தான் எங்களது முக்கியமான கோரிக்கையாகும்.
பாகிஸ்தான் வீரர்களைப் போல
மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்கிய சம்பவத்தையொட்டி, பாகிஸ்தான் வீரர்கள் ஐ.பி.எல்.லில் விளையாட தடை செய்யப்பட்டது. அது போல தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு இலங்கை வீரர்கள் இந்தியாவில் விளையாட தடை விதிக்க வேண்டும் என்று தமிழீழ விடு தலைக்கான மாணவர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் கூறியுள்ளார்.
சென்னை, ஐதராபாத் அணிகள்
ஐ.பி.எல்.லில் உள்ள சென்னை, ஐதராபாத் அணியின் உரிமையாளர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இந்த 2 அணிகளிலும் உள்ள இலங்கை வீரர்களை உடனடியாக நீக்க வேண்டும். இது தொடர்பாக இ.மெயில் மூலம் தகவல் அனுப்பி இருக்கிறோம். நாளைக்குள் அவர்கள் இலங்கை வீரர்களை நீக்கா விட்டால் முற்றுகை போராட்டம் நடத்துவோம்.
மைதானத்தை முற்றுகையிடுவோம்
அரசியலையும் கிரிக்கெட்டையும் பிரித்து பார்க்க முடியாது. மற்ற நகரங்களில் நடை பெறும் ஐ.பி.எல். போட்டியில் இலங்கை வீரர்கள் ஆடினால் அதனை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்துவார்கள். மும்பை, ஐதராபாத், டெல்லி, பெங்களூர் போன்ற நகரங்களில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்று பிரபாகரன் கூறியுள்ளார்.
-
ஆர்சிபி வெற்றிக்கு 5 காரணங்கள்.. கார்த்திக் "அண்ணன்" பங்களிப்பை மறுக்க முடியுமா? -
வைபவ் சூர்யவன்ஷிக்கு சச்சின் கொடுத்த 'சர்டிபிகேட்'! இளம் புயலின் பேட்டிங் ரகசியத்தை உடைத்த மாஸ்டர்! -
IPL 2026: அடேங்கப்பா..! ஐபிஎல் பரிசுத்தொகை எவ்வளவு? வைபவ் சூர்யவன்ஷி காட்டில் கொட்டிய பணமழை! -
சோலி முடிஞ்சுது.. சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்.. இனி குஜராத் கதி அவ்வளவு தான்! -
RCB-க்கு வாழ்த்து சொன்ன டி.கே.சிவகுமார்! வார்னிங் கொடுத்த சித்தராமையா! இந்த முறை தவறு நடக்கக்கூடாது! -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications