மாலுமிகள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட விவகாரம்-இத்தாலி வெளியுறவுத்துறை அமைச்சர் ராஜினாமா

மீனவர்களைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள கடற்படையினரை இத்தாலி அரசு திருப்பி அனுப்பியதற்கு, அந்த நாட்டில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கேரள மீனவர்களைக் கொன்ற வழக்கில், திரும்பி இந்தியாவிடம் ஒப்படைக்கும் என்று உறுதியளித்ததை தொடர்ந்து, இரண்டு கடற்படை வீரர்களையும் பிணையில் இத்தாலிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டது. ஆனால் இரண்டு வீரர்களையும் திருப்பி அனுப்ப முடியாது என இத்தாலி அரசு முதலில் மறுத்தது.
பின்னர் இந்திய அரசு மற்றும் உச்ச நீதிமன்றம் கொடுத்த அழுத்தங்களினால் அவர்களை மீண்டும் இந்தியாவுக்கு அனுப்பியது.
கடற்படை வீரர்களைத் திருப்பி அனுப்பியதால் இத்தாலி அரசுடைய வெளியுறவுக் கொள்கைத் தோற்றுவிட்டதாக அங்கு கடும் விமர்சனம் எழுந்துள்ளது. இந்த விமர்சனங்களையடுத்து அந்த நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் கியுலியோ தெர்ஸி தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.












Click it and Unblock the Notifications