கூகுள் 'மேப்பதான்' போட்டியால் இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: மத்திய அரசிடம் புகார்

கூகுள் இந்தியா நிறுவனம் தனது இணையதளத்தில் உள்ள வரைபடங்களை அப்டேட் செய்ய மேப்பதான் 2013 என்னும் போட்டியை நடத்தியது. இந்த போட்டி கடந்த பிப்ரவரி மாதம் 12ம் தேதி முதல் மார்ச் 25ம் தேதி வரை நடைபெற்றது. வரைபடங்களுக்காக இந்தியாவில் நடத்தப்பட்ட முதல் போட்டி இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.
மேப்பதான் 2013 போன்ற போட்டிகளால் தேசிய பாதுகாப்புக்கு பிரச்சனை ஏற்படலாம் என்றும், அதனால் இது போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு தேசிய கணக்கெடுப்பு மற்றும் வரைபட தயாரிப்பு அமைப்பான சர்வே ஆஃப் இந்தியா பாதுகாப்பு, உள்துறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சகங்களை கேட்டுக் கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது.
கூகுள் போட்டி குறித்து மத்திய அமைச்சகங்களிடம் புகார் தெரிவிக்கப்பட்டபோதிலும் அந்நிறுவனம் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. வரைபடங்களுக்கான இந்திய பாதுகாப்பு விதிமுறைகளை மீறி மக்களை வரைபடங்கள் அனுப்புமாறு கோரிய கூகுள் நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று பாஜக எம்.பி. தருண் விஜய் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications