திருமண ஆசை காட்டி பள்ளி மாணவியை கற்பழித்த கேரள வாலிபர் கைது
பாலக்காடு: கேரள வாலிபர் ஒருவர் திருமண ஆசை காட்டி பள்ளி மாணவியை கற்பழித்துள்ளார்.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் வடக்கன்சேரி முடப்பலூரைச் சேர்ந்தவர் அப்பாஸ்(27). அதே பகுதியில் செல்போன் கடை வைத்துள்ளார். அவரது கடைக்கு அதே பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி மாலா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) அடிக்கடி வந்தபோது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 22ம் தேதி மாலா மாயமானார். இதையடுத்து அவரை அவரது பெற்றோர் தேடியும் பலனில்லை. அக்கம்பக்கத்தில் விசாரித்தபோது அப்பாஸுடனான தொடர்பு தெரிய வந்தது. இதையடுத்து அப்பாஸைத் தேடிச் சென்றபோது அவரும் மாயமாகியிருந்தார். விசாரித்ததில் அவர் தனது நண்பர் உதவியுடன் மாலாவை கடத்தியது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள் இது குறித்து வடக்கன்சேரி போலீசில் புகார் கொடுத்தனர். அவர்களின் புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் அவர்களை தேடியபோது அவர்கள் ஏற்காட்டில் உள்ள லாட்ஜ் ஒன்றில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் ஏற்காடு சென்று அவர்களை கேரளாவுக்கு அழைத்து வந்தனர்.
வடக்கன்சேரி காவல் நிலையத்தில் வைத்து நடத்தப்பட்ட விசாரணையின்போது மாலா கூறுகையில்,
செல்போன் கடைக்கு அடிக்கடி சென்றபோது அப்பாஸுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் அவர் எனக்கு திருமண ஆசை காட்டினார். கடந்த 22ம் தேதி என்னை ஏற்காட்டுக்கு அழைத்துச் சென்று அங்குள்ள லாட்ஜ் ஒன்றில் தங்க வைத்தார். லாட்ஜில் வைத்து அவர் என்னை கற்பழித்தார். மேலும் திருமண ஆசை காட்டி அடிக்கடி என்னிடம் உல்லாசம் அனுபவித்தார் என்றார்.
இதையடுத்து அப்பாஸ் கைது செய்யப்பட்டார்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை












Click it and Unblock the Notifications