நான் இப்படித்தான், பெண் பித்தன்தான்.. மனம் திறக்கிறார் குஷ்வந்த் சிங்
டெல்லி: கண்ணதாசனைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. சாகாவரம் படைத்த எத்தனையோ அமர காவியங்களைக் கொடுத்தவர். அதேபோல வடக்கில் அட்டகாசமான ஒரு எழுத்தாளர், கவிஞர் என்றால் அது குஷ்வந்த் சிங்தான். கண்ணதாசனைப் போலவே இவரும் தனிப்பட்ட வாழ்க்கையில் மதுவும், மாதுவுமாக உலவியவர்தான்.
குஷ்வந்த் சிங் குறித்துப் பேச ஆரம்பித்தாலே கிளுகிளுப்பாகி விடும். அப்படி ஒரு குஷாலான பேர்வழி குஷ்வந்த் சிங். அவரே அவரைப் பற்றி நிறையச் சொல்லியுள்ளார். நமக்குத் தெரியாத பல விஷயங்களைக் கூட அவர் வெட்கமில்லாமல், கூச்சமில்லாமல், தயக்கமில்லாமல் கூறியுள்ளார்.
அப்படி அவர் கூறிய ஒரு நூல்தான் "Khushwantnama: The Lessons of My Life" என்ற தலைப்பிடப்பட்ட அவரது வாழ்க்கை வரலாறு நூலாகும். இந்த நூலில் தன்னைப் பற்றி நிறையவே சொல்லியுள்ளார் குஷ்வந்த் சிங்.

98வது பிறந்த நாளை முன்னிட்டு
தனது 98வது பிறந்த நாளை முன்னிட்டு இந்த நூலை கொண்டு வந்துள்ளார் குஷ்வந்த் சிங். இதை அவரது நெருங்கிய தோழியும், பிரதமர் மன்மோகன் சிங்கின் மனைவியுமான குர்சரண் கெளர் வெளியிட்டார். குஷ்வந்த் சிங்கின் வீட்டில் வைத்து இந்த நிகழ்ச்சி நடந்தது.

என்ன பாடம் படித்தேன்...
இந்த நூலில் தான் வாழ்க்கையில் கற்றுக் கொண்ட பாடங்களை அழகாக சொல்லியுள்ளார் குஷ்வந்த் சிங். அரசியல் அனுபவம், இந்தியாவின் எதிர்காலம், தனது வாழ்க்கையின் மறக்க முடியாத சுவாரஸ்யமான அனுபவங்கள் என்று சகலத்தையும் இதில் தொட்டுள்ளார்.

தோழிக்கு சமர்ப்பணம்
இந்த நூலை தனது தோழியான பிரதமரின் மனைவி குர்சரண் கெளருக்கு சமர்ப்பிப்பதாக கூறியுள்ளார் குஷ்வந்த் சிங்.

செக்ஸ் தரும் மகிழ்ச்சி
தனது நூலில் நிறைய விஷயங்களை அலசியுள்ள குஷ்வந்த் சிங், செக்ஸ் வாழ்க்கை குறித்தும் சிலாகித்து எழுதியுள்ளார். அது தனக்குத் தந்த மகிழ்ச்சியை சந்தோஷத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

டெய்லி கொஞ்சம் விஸ்கி...
நான் தினசரி விஸ்கி சாப்பிடுவதை விரும்புகிறேன். இப்போதும் கூட அது எனக்குப் பிடித்திருக்கிறது. அதை சுவைப்பதில் சந்தோஷமடைகிறேன்.

மானக்கேடான விஷயங்கள்
அதேபோல செய்தித் தாள்களில், பத்திரிகைகளில் வரும் மானக்கேடான செய்திகளை சேகரிப்பதில் பெரும் ஆர்வம் காட்டுகிறேன். ருசியான உணவை சுவைக்கிறேன். கிசுகிசு, மானக்கேடான தகவல்களை கேட்பதில் ஆர்வமாக இருக்கிறேன்.

எனக்கு பெண்கள் இச்சைப் பொருள்தான்
பெண்கள் என்றால் தாய்மாராக, சகோதரிகளாக, மகள்களாக பார்க்க வேண்டும் என்ற இந்திய சித்தாந்தத்தை என்னால் உறுதி செய்ய முடியவில்லை. பெண்கள் எந்த வயதினராக இருந்தாலும், அவர்களை இச்சைப்பொருளாகத்தான் பார்த்தேன். பார்க்கிறேன். என்றைக்கும் நான் பெண் பித்தனாகவே இருந்து வந்திருக்கிறேன் என்று கூறியுள்ளார் குஷ்வந்த் சிங்.

நீண்ட காலம் வாழ்வது எப்படி...
மேலும் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்வது எப்படி என்பது குறித்தும் டிப்ஸ் கொடுத்துள்ளார் குஷ்வந்த் சிங்.

பாகிஸ்தானின் பஞ்சாபில் பிறந்தவர்
குஷ்வந்த் சிங் தற்போது பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திற்குட்பட்ட ஹடாலி என்ற ஊரில் பிறந்தவர். யோஜனா என்ற பத்திரிக்கையை நிறுவியவர். இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி இந்தியாவின் எடிட்டராக இருந்தார். நேஷனல் ஹெரால்ட், இந்துஸ்தான் டைம்ஸ் ஆகியவற்றின் எடிட்டராகவும் இருந்துள்ளார்.

டிரெய்ன் டூ பாகிஸ்தான்
டிரெய்ன் டூ பாகிஸ்தான், டெல்ளி உள்ளிட்ட பல ஹிட் நூல்களை எழுதியவர். தனது 95வது வயதில் தி சன்செட் கிளப் என்ற நூலை எழுதினார். செக்ஸ் குறித்தும், நட்பு குறித்தும், சந்தோஷம் குறித்தும் விளக்கிய புத்தகம் இது.

எம்.பி. - பத்மபூஷன்
நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார் குஷ்வந்த் சிங். மேலும், பத்மபூஷன், பத்மவிபூஷன் விருதுகளையும் வென்றுள்ளார். 1974ல் பெற்ற பத்மபூஷன் விருதை, 84ல் நடந்த பொற்கோவில் ராணுவத் தாக்குதலுக்கு அதிருப்தி தெரிவித்து அதை திருப்பிக் கொடுத்து விட்டார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications