கூடங்குளம் மின் உற்பத்தி ஏப்ரலில் தொடங்கும்- பிரதமர்; தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம்- நாராயணசாமி

கூடங்குளத்தில் ரஷிய நாட்டு தொழில்நுட்ப உதவியுடன் ரூ.15 ஆயிரம் கோடி செலவில் மத்திய அரசு அணுமின் நிலையத்தை அமைத்துள்ளது. தலா 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் வகையில் 2 அணு உலைகள் நிறுவப்பட்டுள்ளன. இதில் முதலாவது அணு உலையில் பணிகள் முடிவடைந்து இறுதிக்கட்ட சோதனைகள் முடிந்து விட்டன.
2-வது அணு உலை பணிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டது. முதல் அணு உலையில் பணிகள் முடிந்த பின்னரும் மின் உற்பத்தி தொடங்கப்படவில்லை.
இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவில் நடந்த 'பிரிக்ஸ்' நாடுகள் மாநாட்டில் ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் மன்மோகன்சிங் பேச்சு நடத்தினார். அப்போது கூடங்குளம் அணுமின் நிலையம் அடுத்த மாதம் (ஏப்ரல்) செயல்படத் தொடங்கும் என்று புதினிடம் மன்மோகன்சிங் தெரிவித்தார். அத்துடன் கூடங்குளத்தில் 3-வது, 4-வது அணு உலைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் இதில் உள்நாட்டிலும் அனுமதி பெற வேண்டிய அவசியம் பற்றி புதினிடம் கூறியதாகவும் மன்மோகன்சிங் தெரிவித்தார்.
முதல் அணு உலையில் 1000 மெகாவாட் மின்சாரத்தில் தமிழ்நாடு தவிர கர்நாடகம், கேரளா, புதுவை மாநிலங்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்படும். இதனால் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்படும் மின்சாரத்தின் அளவு குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கூடங்குளத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் முழுவதையும் தமிழகத்துக்கே வழங்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுபற்றி பிரதமர் அலுவலக அமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் பேசும் போது, கூறியதாவது:
கூடங்குளத்தில் மிக விரைவில் மின்சார உற்பத்தி தொடங்கப்பட இருக்கிறது. இதில் தமிழகத்துக்கு கணிசமான அளவு மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் உண்மைக்கு புறம்பான தகவல்களை மக்களிடம் பரப்பி திசை திருப்பி வருகிறார்கள்.
தமிழ்நாட்டுக்கு மின்சாரம் தேவைப்படுவதை அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். சிறிது காலதாமதம் ஆனாலும் ஏப்ரல் மாதத்தில் மின்சார உற்பத்தி தொடங்கப்படும். இதில் தமிழ்நாட்டுக்கு கூடுதல் மின்சாரம் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
ஏப்ரல் மாதம் கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்படத் தொடங்கும் என்று பிரதமர் மன் மோன்சிங் அறிவித்தாலும் இன்னும் தேதி முடிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications