ஃபேஸ்புக் நட்பினால் பெண்மையை இழந்த இளம் பெண்... ஆண் நண்பர் கைது

Subscribe to Oneindia Tamil

Facebook Logo
மும்பை: ஃபேஸ்புக்கில் நட்பான நபர், இளம்பெண்ணை மயக்கமருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், கட்கோபர் பகுதியில் வசிக்கும் 20 வயது பெண், நலசோபராவில் வசிக்கும் அமே சக்பால் என்பவருக்கு ஃபேஸ் புக் மூலம் அறிமுகமானார். இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது.

இந்த நிலையில் தனது பிறந்தநாள் விழாவில் பங்கேற்க வரும்படி காதலிக்கு அமே சக்பால் அழைப்பு விடுத்தார்.அவரது பேச்சை நம்பி நலசோபராவுக்கு வந்த அந்த பெண்ணிற்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை தந்த காதலன், அவரை வீட்டுக்கு அருகே உள்ள லாட்ஜிற்கு அழைத்துச் சென்றார். அங்கு சென்ற உடன் மயங்கிவிட்டார் அந்தப் பெண். சில மணிநேரம் கழித்து மயக்கம் தெளிந்து எழுந்த அந்த பெண், தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை உணர்ந்தார்.

நிர்வாண நிலையில் தான் படுத்திருப்பதை உணர்ந்த அந்த பெண், தன்னை பலாத்காரம் செய்த அமே சக்பால், தன்னை வீடியோ எடுப்பதை பார்த்து அலறினார்.

அதற்கு அமே சக்பால், உடனடியாக திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்றும், அதற்கு மறுத்தால், ஆபாச வீடியோவை இண்டர்நெட்டில் வெளியிட்டு விடுவேன் எனவும் மிரட்டினார்.

அவரது பிடியில் இருந்து சாதுர்யமாக பேசி தப்பிவந்த அந்தப் பெண், போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் அமே சக்பால் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்து குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து தந்த அவரது தாயார் அபர்ணா ஆகியோரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்கள் இருவரையும் ஏப்ரல் 3-ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+