காமன்வெல்த் மாநாடு பற்றிய இந்தியாவின் நிலையை பிரதமர்தான் அறிவிப்பா:நாராயணசாமி
Subscribe to Oneindia Tamil
சென்னை: கொழும்பு காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை மீதான அரசின் நிலைப்பாட்டை பிரதமர் மன்மோகன்சிங்தான் அறிவிப்பார் என்று மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர். காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்த இந்தியா அனுமதிக்கக் கூடாது. இலங்கையில் நடந்தால், அதனை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று ஜி.கே. வாசன் கூறியுள்ளார். அது அவரது தனிப்பட்ட கருத்து. ஆனால், மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என்பதை அமைச்சர்களுடன் ஆலோசித்த பிறகு பிரதமர் அறிவிப்பார்.
காமன்வெல்த் மாநாடு நவம்பர் மாதம்தான் நடைபெற இருக்கிறது. அதனால் முடிவை உடனே எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications