For Daily Alerts
Just In
விருதுநகரில் காங்.எம்.பி. அலுவலகத்தை முற்றுகையிட வந்த மாணவர்கள் மீது தாக்குதல்!

இலங்கை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டைக் கண்டித்து தமிழீழ விடுதலைக்கான மாணவர் இயக்கத்தினர் 20 பேர், விருதுநகரில் காங்கிரஸ் எம்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது எம்.பி. அலுவலகத்தில் எம்.பி.யின் நேர்முக உதவியாளர் உள்ளிட்ட சிலர் இருந்தனர். அவர்கள் மாணவர்களைக் கலைந்து போகச் சொல்லியுள்ளனர். அப்போது இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியதாக தெரிகிறது.
இதில் மாணவர்கள் நால்வருக்கு காயம் ஏற்பட்டதாகவும் இதனால் போலீசில் புகார் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, காங்கிரசார் நால்வரைப் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.