திருப்பதியில் இரவு நேர வி.ஐ.பி. தரிசனம் ரத்தாகிறது

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோடை விடுமுறையையொட்டி பக்தர்கள் கூட்டம் அதிகரித்து உள்ளது. கடந்த 3 நாட்களாக தொடர் அரசு விடுமுறை என்பதால் லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் திரண்டனர். மேலும் வி.ஐ.பி.க்களும் குவிந்ததால் சாதாரண பக்தர்கள் தரிசனம் செய்ய மணிக்கணக்கில் வரிசையில் காத்து கிடந்தனர்.
இதனால் அவர்கள் கோவில் ஊழியர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பக்தர்களை சமாளிப்பதில் தேவஸ்தானம் படாதபாடுபட்டது. நேற்று காலை முதல் இரவு வரை 75 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். இன்றும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.
அதிகரித்து வரும் பக்தர்கள் கூட்டத்தை சமாளித்து தரிசனத்தை துரிதப்படுத்துவது குறித்து திருமலை தேவஸ்தான அறங்காவலர் குழுவினர் நேற்று ஆலோசனை நடத்தினார்கள். இந்த கூட்டத்தில் இரவு நேரம் வி.ஐ.பி.க்கள் தரிசனத்தை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டது. வி.ஐ.பி.க்களை காலை மட்டும் தரிசனத்துக்கு அனுமதிப்பது என்றும் வியாழக்கிழமை தவிர மற்ற நாட்களில் இரவு நேர தரிசனத்தை ரத்து செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.
சாதாரண பக்தர்களுக்கு தரிசனத்துக்கு 3 வினாடி ஆகிறது என்றால் வி.ஐ.பி.க்களுக்கு 3 நிமிடம் ஆகிறது. அதோடு இரவில் தரிசனம் செய்யும் வி.ஐ.பி.க்கள் மறுநாள் காலையில் தரிசனத்துக்கு வருகிறார்கள். இதனால் சாதாரண பக்தர்கள் தரிசனத்தை தடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
புதிய நடைமுறை அமுல் படுத்தப்பட்டால் தினமும் கூடுதலாக 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க முடியும் என்று கூட்டத்தில் கருத்து கூறப்பட்டது. எனவே அடுத்த அறங்காவலர் குழு கூட்டத்தில் இந்த ஆலோசனை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு அமுல் படுத்தப்படும் என்று அறங்காவலர் குழு தலைவர் பாபுராஜு தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications