எதியூரப்பா கட்சியில் பெருமாள் + நர்ஸுக்கு 'கிஸ்' கொடுத்த ரேணுகாச்சாரியா!!

ஷெட்டர் அமைச்சரவையில் எக்ஸைஸ் துறை அமைச்சராக இருந்து வந்தவர் ரேணுகாச்சார்யா. சமீபத்தில் அவர் முன்னாள் முதல்வர் சதானந்த கெளடா குறித்து பல்வேறு புகார்களை சுமத்தினார். இதையடுத்து அவரை பாஜக மேலிடம் கட்சியை விட்டு தூக்கியது.
தூக்கப்பட்ட ரேணுகாச்சார்யா அதே வேகத்தில் எதியூரப்பாவைப் பார்த்து அவரது கட்சியில் சேர்ந்து கொண்டார். வருகிற சட்டசபைத் தேர்தலில் அவர் ஹொன்னாலி தொகுதியிலிருந்து போட்டியிடுவார் என்று எதியூரப்பா உடனடியாக அறிவித்தார்.
நர்ஸுக்கு உம்மா கொடுத்தவர்
முன்னதாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர், ரேணுகாச்சாரியா. நர்ஸ் ஜெயலட்சுமி என்பவருடன் நெருங்கிப் பழகிய அவர் மீது சில ஆண்டுகளுக்கு முன்பு ஜெயலட்சுமி பரபரப்பு புகார்களைக் கொடுத்தார். மேலும் தானும், ரேணுகாச்சாரியாவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
அதேபோல எதியூரப்பாவுக்கு எதிராகவும் ஒரு காலத்தில் போர்க்கொடி உயர்த்தியவர்தான் ரேணுகாச்சாரியா. மேலும் எதியூரப்பாவின் நெருக்கமான தலைவியான ஷோபா கரண்டலேஜவுக்கு எதிராகவும் செயல்பட்டவர். ஆனால் அரசியல் ஆதாயத்திற்காக இதையெல்லாம் மறந்து விட்டு தன்னுடன் இணைத்துக் கொண்டுள்ளார் எதியூரப்பா என்பது குறிப்பிடத்தக்கது.
சிவாஜி நகரில் பெருமாள்...!
இதற்கிடையே, சட்டசபைத் தேர்தலுக்கான 2வது வேட்பாளர் பட்டியலை கர்நாடக ஜனதாக் கட்சி வெளியிட்டுள்ளது.
இதில் முக்கிய வேட்பாளர் ஐ.ஆர்.பெருமாள். இவர் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆவார். இவரும் கூட ஊழல் புகாரில் சிக்கியவர்தான். 2002ம் ஆண்டு இவர் மைசூர் மினரல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்தபோது வீட்டில் லோகாயுக்தா அதிகாரிகள் ரெய்டு நடத்தி ரூ. 1.22 கோடி மதிப்பிலான சொத்துப் பத்திரங்களைக் கைப்பற்றினர்.
தற்போது பெருமாள் பதவியிலிருந்து ஓய்வு பெற்று விட்டார். எதியூரப்பா கட்சியில் இணைந்து செயல்படுகிறார். தமிழர்களின் வாக்குகளைக் கவரும் வகையில் பெருமாளுக்கு சீட் கொடுத்துள்ளார் எதியூரப்பா என்று கருதப்படுகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications