கரூரில் தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் தாய், சேய் பலி
Subscribe to Oneindia Tamil
கரூர்: தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் பிரவசத்துக்கு வந்த தாய் மற்றும் குழந்தை பலியான சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கோடநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். அவரது மனைவி மகேஸ்வரி(33). அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் மகேஸ்வரி மூன்றாவது முறையாக கர்ப்பம் ஆனார். இதையடுத்து பிரசவத்திற்காக அவர் கரூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள பொன்னையா கவுசல்யா என்ற தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று மாலை 5 மணி அளவில் மகேஸ்வரிக்கு டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இதில் தாயும், பிறந்த குழந்தையும் இறந்தது.
இதையடுத்து தவறான சிகிச்சை அளித்தாகக் கூறி அவரது உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். இந்த சம்பவம் குறித்து டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications