For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கரியவாசம் அவர் வேலைய மட்டும் பார்க்கனும்.. ரொம்ப லேட்டாக கண்டிக்கும் நாராயணசாமி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Narayanasamy condemns Prasad Kariawasam
புதுச்சேரி: சிங்களவர்கள் வட இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்று கருத்து கூறிய இலங்கைத்தூதர் கரியவாசத்தின் கருத்துக்கு லேட்டாக கண்டனம் கூறியுள்ளார் மத்திய அமைச்சர் நாராயணசாமி.

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக உலகமெங்கும் தமிழர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் வட இந்தியாவில் தமிழர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் வட இந்தியர்களை திசை திருப்பும் வகையில், இந்தியாவின் வட மாநிலங்களே சிங்கள மக்களின் பூர்வீகம் என்று இலங்கை தூதர் கரியவாசம் கருத்து கூறியிருந்தார்.

இதற்கு தமிழகத் தலைவர்கள் அனைவரும் கண்டனம் தெரிவித்தனர். இலங்கைத் தூதரை கைது செய்யவேண்டும் என்று வலியுறுத்தினர்.

இந்த நிலையில் கரியவாசம் கூறிய கருத்து லேட்டாக கருத்து கூறியுள்ளார் மத்திய அமைச்சர் நாராயணசாமி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூறியதாவது:

இலங்கையில் வாழும் தமிழர்களின் மேம்பாட்டிற்கு மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியே, நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் தமிழக கட்சிகள் தீர்மானம் நிறைவேற்றுவதிலும் பிரதமருக்கு கடிதம் எழுவதிலுமே காலத்தை கடத்துகின்றன.

இலங்கை தூதர் கரியவாசம், தூதரக வேலையை விட்டு தேவையில்லாத ‌பணிகளில் தலையிடக்கூடாது. சிங்களர்கள் வட இந்தியர்கள் தான் என கருத்து தெரிவித்தாலும் அதனை வெளியுறவுத்துறையிடம் தான் தெரிவிக்க வேண்டும். தனிப்பட்ட முறையில் கருத்து தெரிவிக்க கூடாது என்று கூறியுள்ளார்.

English summary
Union minister of state Narayanasamy has condemned the Lankan envoy Prasad Kariawasam for his unecessary speech on Indians.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X