ஸ்கைப், வாட்ஸ் அப் பயன்பாடு: தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு சவூதி அரசு புதிய கட்டுப்பாடு
ரியாத்: ஸ்கைப் மற்றும் வாட்ஸ்ஆப் போன்ற அப்ளிகேஷன்கள் சவூதி அரேபிய சட்டத்திற்குட்பட்டு செயல்பட வேண்டும் என்று அந்நாட்டு அரசு தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
இன்டர்நெட் மூலம் பிரியமானவர்களுடன் பேச உதவும் ஸ்கைப், எஸ்.எம்.எஸ். அனுப்ப உதவும் வாட்ஸ் அப் உள்ளிட்ட அப்ளிகேஷன்கள் சவூதி அரேபிய விதிமுறைகளுக்குட்பட்டு இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து இந்த வசதிகளை வழங்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அவற்றை கண்காணிக்க வேண்டும் அல்லது தடை செய்ய வேண்டும் என்று சவூதி அரசு உத்தரவிட்டதாக கடந்த வாரம் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் சவூதி அரேபியாவின் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆணையம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்டர்நெட் உதவியுடன் பயன்படுத்தப்படும் சில அப்ளிகேஷன்கள் உள்நாட்டு விதிகளை மீறியுள்ளன என்பது தெளிவாகியுள்ளது என்று தெரிவித்துள்ளது. விதிகளை மீறியவைகள் பட்டியலில் ஸ்கைப், வைபர் மற்றும் வாட்ஸ் அப் உள்ளிட்டவைகளின் பெயர்கள் உள்ளன.
இதையடுத்து ஸ்கைப், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சேவகளை வழங்கும் தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் அவை சவூதி விதிமுறைகளுக்கு உட்பட்டுள்ளதா என்பதை கவனிக்க வேண்டும் என்று அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
சவூதியின் 3 முக்கிய மொபைல் ஆபரேட்டர்களான சவூதி டெலிகாம் நிறுவனம், எதிஹாட் எடிசலாட் மற்றும் ஜயின் சவூதி ஆகியவை இது குறித்து எதுவும் உடனடியாக தெரிவிக்கவில்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications